பெ. சுந்தரம் பிள்ளை
நாடக நூல் எழுத்தாளர்
பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர், இதன் பொருட்டு மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை என்றே அழைக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- அழுதீர் தொழுதீர் விடுவீர் விடுவீர் வீணான விசனமே
- அன்பை அறியாது வாதிப்பவர் தன் தாயின் பாலையும் நஞ்சென சோதிப்பார்
- இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும்
- இரவியைக் காண விளக்கின் உதவி எதற்கு.
- உரிமைமேல் ஆண்மையில்லா சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்த சீதம்
- உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்து அளவு
- எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம்
- ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ
- கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை
- கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்
- கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே
- சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்
- சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
- தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்
- தாய் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர்
- துறந்தாரும் முற்றும் துறந்தவரல்ல மறந்தார் சிற்சில்
- தொட்டே உணரும் தோல் பட்டே உணரும் முட்டாள்
- நம்புதல் என்பதுவே அன்பிள் வலிமை
- பற்பல அண்டம் வெடித்தடங்கிடும் தடுப்பவர் யார் விடுத்திடு வீன் விசனம்
- மூட்டிடில் தீயும் மூளூம் மும்மடங்காய்
- யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
- விதியெனப்பாவனை பண்ணிக்கடமையை விலக்குதல் மடமையே
- விரும்பி யாரும் உண்ணும் கரும்பு கசப்பது உன் வாயின் குற்றமே
- வெந்த புண் அதிலே வந்திடும் நூறடி