கடன்
கடன் என்பது பொதுவாக திரும்பக்கொடுக்கவேண்டிய சொத்திருப்புகளைக் குறிக்கும்,
- சிக்கனமான வாழ்க்கையின் இரகசியப் பகைவன். கடன். வெளிப்படையான பகைவர்கள். தீயொழுக்கமும் சோம்பலும், கடன் வாங்கும் பழக்கமும் தரித்திரமும் இரட்டைப் பிள்ளைகள். - டி. டி. முங்கச்[1]
- சிறு கடன் ஒரு கடன்காரனை உண்டாக்கும். பெருங்கடன் ஒரு பகைவனை உண்டாக்கும். - பப்ளியஸ் ஸைரஸ்[1]
- சொற்பக் கடனுள்ளவன் சொற்பக் காலத்தில் அதை அடைத்து விடலாம். அவன் கவனமாயிருந்தால், அடைத்துவிடுவான் அவன் அசட்டையாயிருந்துவிட்டால் கடன் பெருகிவிடும் அவன் ஒருகாலும் அடைக்க முடியாது என்று மனம் தளர்ந்து போவான். அதனால் தன் கணக்குகளை ஒரு போதும் திருப்பிப் பார்க்கமாட்டான். - செஸ்டர்ஃபீல்ட்[1]
- கடன் வாங்குவதில் நீ என்ன செய்கிறாய் என்பதை நினைத்துப் பார். உன் சுதந்தரத்தின்மீது மற்றொருவனுக்கு அதிகாரம் அளிக்கிறாய். தவணைப்படி கடனைச் செலுத் முடியாவிட்டால், உன் கடன்காரனை நீ பார்க்க வெட்கப் படுவாய் அவனிடம் பேசும்பொழுது அஞ்சி நடுங்குவாய் அற்பமான, இரங்கத்தக்க போலிச் சாக்குப்போக்குகளைச் சொல்வாய், படிப்படியாக உண்மை பேசுவதை நிறுத்தி பச்சைப் பொய் சொல்லத் தொடங்குவாய், கடனோடு இரண்டாவது தீமையான வெற்றுப்பை நிமிர்ந்து நிற்பது கஷ்டம் - ஃபிராங்க்லின்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 145-146. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.