அவசரம்

விரைவான நடவடிக்கை

அவசரம் (Haste) என்பது விரைவான நடவடிக்கையைக் குறிக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  • எப்பொழுதும் அவசரம் அதிகமானால், வேகம் குறையும்? - சர்ச்சில்[1]
  • நான் எப்பொழுது அவசரப்பட்டாலும் ஒரு பொழுதும் பரபரப்படைவதில்லை. - ஜான் வெஸ்லி[1]
  • பரபரப்புக்கும் விரைவுக்கும் உள்ள வேற்றுமைபோல் வேறு எந்த இரு பொருள்களுக்கும் கிடையாது. பரபரப்பு பலவீனமான மனத்திற்கு அறிகுறி, விரைவு வலிமையுள்ள மனத்திற்கு, அறிகுறி. - கோல்ட்டன்[1]
  • வேகமாக ஓடுகிறவர்கள் தடுமாறி விழுவார்கள் அறிவோடு மெதுவாகச் செல்ல வேண்டும். _ ஷேக்ஸ்பியர்[1]
  • பொருத்தமில்லாத அவசரம் தவறுக்கு நேர்பாதை. - மோலியர்[1]
  • அவசரப்படுவதால் வழக்கமாகத் தாமதமே உண்டாகும். நெல்ஸன் பிரபுவைப் போல் வழக்கப்படுத்திக்கொண்டால், அவசரத்தைத் தவிர்க்கலாம். அவர் எதற்கும் பத்து நிமிடம் முன்கூட்டியே சென்றுவிடுவார். இதுவே அவர் வாழ்க்கையில் வெற்றிக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். -போவீ[1]
  • ஒடுவதால் பயனில்லை; குறித்த நேரத்திற்கு முன்பே புறப்படுவதுதான் அவசியம். - லாஃபோன்டெயின்[1]
  • ஏமாற்றும் பித்தலாட்டமும் எப்பொழுதும் அவசரப்படுவது வழக்கம். எல்லா விஷயங்களுக்கும் போதிய நேரம் வேண்டும். அதிக அவசரம் அதிக நஷ்டம். -ஃபிராங்க்லின்[1]
  • எவன் அவசரப்பட்டாலும், அது அவன் மேற்கொண்டுள்ள காரியம் அவன் சக்திக்கு மிகவும் மேற்பட்டது என்பதைக் காட்டுகின்றது. அவசரம் வேறு, பரபரப்பு வேறு. -சென்டர்ஃபீல்டு[1]
  • மரியாதைகளுக்கு நேரம் வேண்டும். அவசரத்தைப் பார்க்கிலும் அநாகரீகமில்லை -எமர்சன்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 50-51. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அவசரம்&oldid=20000" இலிருந்து மீள்விக்கப்பட்டது