• அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை - முரசொலி மாறன்
  • தேர்தல் அரசியல் திருடர் பாதை - சீமான்?
  • அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல் - பெரியார்
  • இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி! - பிடல் காஸ்ட்ரோ
  • விடுதலை என்பது எதிரி நமக்குக் கொடுப்பது அன்று. ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து நாமே போராடிப் பெற வேண்டிய புனிதமான உரிமை! - பிரபாகரன்
  • நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்! - சே குவேரா
  • உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை - அடிமைத்தளையைத் தவிர. ஆனால் வெல்வதற்கு உலகமே இருக்கிறது! - காரல் மார்க்சு
  • எந்த ஒரு முக்கியச் சமூக மாற்றமும் புரட்சி இல்லாமல் ஏற்படுவதில்லை. புரட்சி என்பது சிந்தனையைச் செயலாக்குவது! - எம்மா கோல்ட்மேன்
  • சிந்தனையாளர்கள் பெரும்பாலும் உலகத்தை விளக்குகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நமது வேலை உலகத்தை மாற்றியமைப்பதுதான் - காரல் மார்க்சு
  • புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம். புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது! - ஹுவே நியூட்டன்
  • ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி!
  • புரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள் - லெனின்
  • புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி! - ஹெச்.ஜி.வெல்ஸ்
  • போராட்டமின்றி முன்னேற்றமில்லை- பிரடரிக் டக்ளஸ்
  • ஐரோப்பாவில் பல சிம்மாசனங்கள் காலியாகி உள்ளன. தைரியம் உள்ளவன் ஏறி அமர்ந்துகொள்ளலாம்! - நெப்போலியன்
  • புரட்சியின் கால அளவையும், முன்னேற்றத்தையும் தீர்மானிக்க முடியாது. அது தன்னுடைய சொந்த, புதிரான விதிமுறைகளின்படி இயங்குகிறது! - லெனின்
  • அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல - மாக்சிம் கார்க்கி
  • ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - அம்பேத்கர்
  • விடுதலையின் விலை குருதி - சுபாஷ் சந்திர போஸ்
  • கொஞ்சம் ரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் - சுபாஷ் சந்திர போஸ்
  • பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தாம் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்- அம்பேத்கர்
  • பார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம். ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது.- அம்பேத்கர்
  • வியாபாரிகள், தொழிலதிபர்கள் அரசியலில் ஈடுபடும் போது, கலைஞர்கள் ஈடுபடுவதில் தவறு இல்லை என்பது என் கருத்து. ஆனால் அதே நேரத்தில் நடிகர்களை நம்பி மட்டுமே அரசியல் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். — நடிகர் ஜெய்சங்கர் (8.1-1975)[1]
  • அரசியலைப் போன்ற சூதாட்டம் வேறில்லை. - டிஸ்ரேலி[2]
  • ஒழுக்க முறைப்படி தவறாயுள்ளது. அரசியல் முறையில் சரியானதாக ஆகிவிடாது. - ஓ கானல்[2]
  • சமுதாய வாழ்க்கையில், ஒழுக்க முறைப்படியுள்ள வாழ்க்கையில், அரசியல் மிகவும் சுருக்கமான அளவிலேயே பாதிக்கின்றது. தனியான ஒரு நல்ல புத்தகம் இதைவிட அதிகமாக மக்களிடத்தில் ஆதிக்கம் பெற்று விளங்குகின்றது- கிளாட்ஸ்டன்[2]
  • நாட்டுக்குச் சிறந்த சேவை செய்பவனே தன் கட்சிக்குச் சிறந்த சேவை செய்பவனாவான். - பி. ஹேய்ஸ்[2]
  • சமூகம் முறையாக முன்னேறுவதற்கும். அந்த முன்னேற்றம் தலைசிறந்த பயன் விளைப்பதாகவும், தனக்கு வசதியாகவும் உள்ள வழிகளில் நடைபெறுவதற்கும் உரிய அறிவே அரசியல் என்று நான் கருதுகின்றேன். - உட்ரோ வில்ஸன்[2]
  • சில அரசியல்வாதி கடவுளையும் ஏமாற்றக்கூடியவன். - ஷேக்ஸ்பியர்[2]
  • இரசாயன நிபுணனாயிருக்க வேண்டுமானால் நீ இரசாயன சாத்திரத்தைக் கற்க வேண்டும், வக்கீலாயிருக்கச் சட்டம் பயிலவேண்டும் வைத்தியனாயிருக்க மருத்துவம் பயில வேண்டும். ஆனால், அரசியல்வாதியாவதற்கு, உனக்குத் தேவையான நலன்களை மட்டும் அறிந்துகொண்டால் போதும். - மாக்ஸ் ஓ'ரெல்[2]
  • பாவத்தை நான் வெறுப்பது போலவே, குளறுபடி செய்வதை, அதிலும் அரசியலில் குளறுபடி செய்வதையும் நான் வெறுக்கிறேன். அந்தத் தவற்றினால் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்களுக்குத் துயரமும் அழிவும் ஏற்படு கின்றன. - கதே[2]
  • அரசாங்க விஷயத்தில் தனிமனிதர் தலையிடக்கூடாது என்று யாரோ சொல்லியிருக்கின்றனர். துணிந்து கூறப்பட்டிருப்பினும், இது ஒழுங்கீனமானது. இதை ஒரு கொடுங்கோலனோ, அடிமையோதான் சொல்லியிருக்க முடியும். தனிமனிதர் அரசாங்க விஷயத்தில் தலையிடக்கூடாது என்று சொல்வது. அவர்கள் தங்கள் சொந்த நன்மை தீமைகளில் தலையிடக் கூடாது என்றும், தாங்கள் நிர்வாணமாயிருக்க வேண்டுமா அல்லது உடைகள் கிடைக்குமா என்றும், தங்களுக்கு உணவு கிடைக்குமா அல்லது பட்டினியாய்க் கிடக்கவேண்டுமா என்றும். தங்களை ஏமாற்றுகிறார்களா அல்லது உண்மையான விஷயங்களைத் தெரிவிக்கிறார்களா என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு உண்டா அல்லது தாங்கள் அழியவேண்டியதுதானா என்றும் அவர்கள் கவனிக்கக்கூடாது என்றும் கூறுவதாகும். -கேட்டோ[2]
  • உண்மையான அரசியல் பிரச்சினைகளைக் கட்சித் தலைவர்கள் உற்பத்தி செய்ய முடியாது. அவைகளை ஒதுக்கவும் முடியாது. அவை லெளிப்பட்டே தீரும். பொது ஜன அபிப்பிராயம் என்ற ஆழ்ந்த கடலிலிருந்து அவை மேலெழுந்து வருகின்றன. -கார்ஃபீல்டு[2]
  • அரசியல்வாதி அடுத்த தேர்தலையே எண்ணுகிறான் அரசியல் நிபுணன் அடுத்த தலைமுறையையே எண்ணுகிறான் அரசியல்வாதி தன் கட்சியின் நன்மையை நாடுகிறான் அரசியல் நிபுணன் தன் நாட்டின் நன்மையை நாடுகிறான் அரசியல் நிபுணன் கப்பலை ஓட்ட விரும்புகிறான்; அரசியல்வாதி கப்பல் தானாக எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் என்று திருப்தியுடன் இருக்கிறான். ஜே. எப். கிளார்க்[2]

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அரசியல்&oldid=19391" இலிருந்து மீள்விக்கப்பட்டது