நெப்போலியன் பொனபார்ட்

(நெப்போலியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது.

நெப்போலியன் பொனபார்ட் (1812)


மேற்கோள்கள்

தொகு
  • நான் மட்டும் எனக்கு மீண்டும் வெண்கல பேரை அழைத்து: சாதாரண ஆண்கள் இரும்பு ஆண்கள் கைது செய்யப்பட்டனர், இறந்தார்.
  • தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான்.[1]
  • ஒரு பாவமும் அறியாதவர்களைக் கூடத் தைரியத்தை இழக்கும்படி செய்யும் சில அவதூறுகளும் இருக்கின்றன.[2]
  • மனிதர்கள் அற்ப விஷயங்களாலேயே இழுத்துச் செல்லப்படுகின்றனர்.[3]
  • உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டான்.[4]
  • குழந்தையின் எதிர்காலக் கதி எப்பொழுதும் தாயில் வேலையால் அமைகின்றது.[5]
  • ஃபிரான்ஸ் நல்ல தாய்மார்களைப் பெற்றிருந்தால் அவள் நல்ல பிள்ளைாளையும் அடைவாள். [5]
  • பொதுவாகத் தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதி யாகத் தீர்மானித்தலே [6]
  • போரிலேகூடப் புற ஆற்றலினும் மன ஆற்றல் மூன்று மடங்காகும்.[6]
  • கலைகள் யாவற்றிலும் உணர்ச்சிகளை மிக அதிகமாய்ப் பாதிக்கக்கூடியது இசைதான்; சட்டம் இயற்றுபவன் அதற்கு முதன்மையான ஆதரவு கொடுக்க வேண்டும்.[7]
  • 'இயலாது!' - இது நல்ல ஃபிரெஞ்சு மொழி அன்று.[8]
  • மடயர்களுடைய அகராதியில்தான் இயலாது என்ற சொல்லைக் காண முடியும்.[8]
  • உலகத்தில் இரண்டே சக்திகள் இருக்கின்றன; அவை வாளும் பேனாவும். இறுதியில் பின்னதே முந்தியதை வென்று விடுகின்றது.[9]
  • பொதுக் கல்வியே அரசாங்கத்தின் முதல் இலட்சியமாயிருக்க வேண்டும்.[10]
  • சூழநிலைகள்! - நானே சூழ்நிலைகளை அமைத்துக் கொள்கிறேன்.[12]
  • ஓய்வு எவ்வளவு இன்பமான விஷயம் கட்டிலே எனக்குச் சொகுசாக உள்ளது. உலகிலுள்ள மகுடங்கள் எல்லாம் கிடைப்பதாயினும், இதை அவைகளுக்கு ஈடாகக் கொடுக்க மாட்டேன். [13]
  • ஆயிரம் துப்பாக்கிச் சனியன்களைக்காட்டிலும், மூன்று பத்திரிகைகளைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.[14]
  • ஒரு பரணியோ. நன்கு அமைக்கப்பெற்ற பாடலோ உள்ளத்தில் பதிந்து, உணாச்சிகளை மென்மையாக்கி, ஒரு பெரிய ஒழுக்க நூலைவிட அதிகப் பயனை விளைவிக்கின்றது: ஒழுக்க நூல் நமது அறிவைத் திருப்தி செய்யுமேயன்றி உணர்ச்சிகளை உண்டாக்காது. நம் பழக்கங்களைச் சிறிதும் மாற்றிவிடாது.[15]
  • பழி வாங்குதலுக்கு முன்யோசனை கிடையாது.[16]
  • மனச்சான்று ஆட்சி செய்யத் தொடங்கும் பொழுது என் ஆட்சி முடிகின்றது.[17]
  • சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது? [18]

தன் சிறைவாசம் குறித்து

தொகு
  • மனைவியையும் மைந்தனையும் பிரிந்து ஆயுள் முழுவதும் நான் சிறைவாசம் செய்ய நேரிட்டது. அப்படியிருந்தும் அவர்களைக் கண்டு பேசிய ஒருவரிடம் சிறிது நேரம் உரையாடவும் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. கொலைத் தொழில் புரிந்து மரணதண்டனை விதிக்கப் பெற்றவர்களும் கழுவேற்றப்படுமுன் தமது மனைவி மக்களுடன் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தாராள நோக்கமுடைய ஆங்கிலேயரது பிரதிநிதியாகிய லோ என்பவனது செய்கையோ அறநெறிக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது. — (20.12-1816)[19]
  • நான் இங்கிலாந்தின் விருந்தாளியேயன்றி சிறையாளன் அன்று. இங்கிலாந்து தேசத்துக்கு நான் அடைக்கலமாக வந்தேன். என் விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அறநெறியையும் சட்டமுறையையும், சமூகத் தர்மத்தையும் இழந்து அதர்மத்தில் இறங்கினர். அவர்களது நடவடிக்கை பிரிட்டிஷ் பெருமைக்கேற்றதா என்று நான் கேட்கிறேன். சென்ட் ஹெலினவில் என்னை ஆயுள்வரையிலும் கிறை செய்தல் கொடுமையினும் கொடுமையாகும். அ ஃ து கேவலம் அநாகரிகக் காரியமாகும். ஆங்கிலேயர்கள் இவ்வளவு கொடுமையாக என்னை நடத்துவார்கள் என்று நான் கனவிலும் கருதினேனில்லை. அத்தீவில் சிறை செய்தலைக் காட்டிலும் என்னைச் சுட்டுக் கொன்று விடுவதே சாலச்சிறந்ததாகும். ஆங்கிலேயர் எனக்கிழைத்த கொடுமையைத் தெய்வமும் சகியாது.[20]

குறிப்புகள்

தொகு
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  5. 5.0 5.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 81-82. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. 6.0 6.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 98-100. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. 8.0 8.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 155-156. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254-255. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 257-258. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 264. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300-301. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/சரித்திரம். நூல் 179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  19. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  20. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=நெப்போலியன்_பொனபார்ட்&oldid=38012" இலிருந்து மீள்விக்கப்பட்டது