பத்திரிக்கையாளர்

இதழ்களுக்காக செய்தி சேகரிக்கும் செம்மைப்படுத்தும் ஒருவர்

பத்திரிக்கையாளர் (Journlalist) என்பவர் பொதுவாக பத்திரிக்கையில் பணிபுரிபவர்களைக் குறிக்கும். தற்போது பத்திரிக்கை மட்டுமல்லாது, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் அனைத்து மக்கள் ஊடகங்களில் பணிபுரிபவர்களும், பத்திரிக்கையாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.

  • பத்திரிகையாளர். சமூகத்தின்மீது விழும் ஆலங்கட்டிகளிலிருந்து தமது குடையால் பாதுகாத்து வருகின்றனர். -ஜி. டபுள்யு. ரஸ்ஸல்[1]
  • நம்முடைய ஜனநாயகத்தைப் போன்ற ஆட்சியுள்ள பெரிய நாடுகளில் அதிகச் செய்திகளைப் பரப்புவதும், அதிகச் சகிப்புத் தன்மையும் அவசியம், ஜனங்களின் அறிவைப் பெருக்குவதும், கல்வியைப் பரப்புவதும் பத்திரிகைகளின் உண்மையான முயற்சிகளாயிருக்கவேண்டும். தாமே தலைமை வகித்து மக்களுக்கு முன்னால் நிற்பதைவிட, இவை முக்கியமானவை. -டபுள்யு ஹோவர்ட்[1]
  • முதலில் உங்கள் செய்திகளைச் சேகரியுங்கள். பிறகு அவைகளை உங்கள் யுக்தம் போலத் திரிக்கலாம். - மார்க் டுவெயின்[1]
  • நூலாசிரியன் என்பதைவிட நான் என்னைப் பத்திரிகையாளன் என்றே சொல்லிக்கொள்ள விரும்புவேன். ஏனெனில், பத்திரிகையாளன் தொழிலைக் கற்றுக்கொண்டே பிழைப்பையும் நடத்துபவன். -ஜி. கே. செஸ்டர்டன்[1]
  • பத்திரிகையை அப்புறப்படுத்திவிட்டால், நமது நாடு குழப்பமாகிவிடும். -ஹாரிசாண்ட்லர்[1]
  • வாரந்தோறும் எழுதுதல், தினந்தோறும் எழுதுதல், சுருக்கமாக எழுதுதல், ரயில்களைப் பிடிப்பதற்கு அவசரமாக ஓடுபவர்களுக்காகச் சுருக்கமாக எழுதுதல் அல்லது மாலை நேரங்களில் களைத்து வீடு திரும்புகிறவர்களுக்காக எழுதுதல் ஆகியவை எழுத்தின் தராதரம் தெரிந்தவர்களுக்கு மிகவும் கஷ்டமான வேலையாகும். -விர்ஜீனியா உல்ஃப்[1]
  • ஆயிரம் துப்பாக்கிச் சனியன்களைக்காட்டிலும், மூன்று பத்திரிகைகளைக் கண்டு நான் அஞ்சுகிறேன். -நெப்போலியன்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254-255. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பத்திரிக்கையாளர்&oldid=25420" இலிருந்து மீள்விக்கப்பட்டது