கில்பர்ட் கெயித் செஸ்டர்டன்
கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ( 29 மே 1874 – 14 ஜூன் 1936) என்பவர் ஒரு ஆங்கிலேய எழுத்தாளரும்,[1] பொதுநிலை இறையியலாளரும், கவிஞரும், மெய்யியலாளரும், நாடக ஆசிரியரும், செய்தியாளரும், பேச்சாளரும், கிறித்தவ தன்விளக்க அறிஞரும் ஆவார்.
- நாம் அறியாதவரிடம் காட்டும் அன்பு, அறிந்தவரிடம் காட்டிடும் அன்பைப் போலவே ஓர் அழியாத உணர்ச்சியின் ஊற்றுக் கண்.[2]
- சாஸ்திரிகளைப் போல் சாமர்த்தியமாய் அஞ்ஞானம் பேசுவதைவிட, சான்றோர்களைப்போல் சாமர்த்தியமின்றி ஞானம் பேசுதலே சாலச் சிறந்ததாகும்.[3]
- கர்வங்கொண்டவர்கள் சம்பந்தமான கஷ்டமெல்லாம் அவர்கள் தாங்கள் வீண் பெருமை பாராட்டுகிறவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதே.[4]
- பிறரைப் பேசவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர் தம் குரல் தொனியைக் கேட்க விரும்புபவர், தம் குரல் தொனி இப்படியிருக்கும் என்று அறியாதவர் என இருவகையர்.[5]
கொள்கை
தொகு- ஒருவன் அநேக விஷயங்களில் வைதீகமாயிருக்க வேண்டும். இல்லையெனில் அவனுக்குத் தன் சொந்த அவைதீகக் கொள்கையைப் போதிக்க ஒருபொழுதும் நேரமிராது.[6]
- நூலாசிரியன் என்பதைவிட நான் என்னைப் பத்திரிகையாளன் என்றே சொல்லிக்கொள்ள விரும்புவேன். ஏனெனில், பத்திரிகையாளன் தொழிலைக் கற்றுக்கொண்டே பிழைப்பையும் நடத்துபவன்.[7]
குறிப்புகள்
தொகு
- ↑ "Obituary", Variety, 17 ஜூன் 1936
- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254-255. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 8.0 8.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.