அவதூறு
அவதூறு (Defamation) என்பது ஒருவரின் மதிப்புக்கு களங்கம் உண்டாக்கின்ற, நற்பெயரைக் கெடுக்கின்ற, பெருமை குலைக்கின்ற மானக்கேட்டை உருவாக்கும் விதத்தில் பேசப்படும் பேச்சாகும்.
மேற்கோள்கள்
தொகு- நீ பனிக்கட்டி போல் குற்றமில்லாதிருந்தாலும், பனிபோல பரிசுத்தமாயிருந்தாலும், நீ பழிச்சொல்லிலிருந்து தப்ப முடியாது. -ஷேக்ஸ்பியர்[1]
- துய வெண்மையான பண்பையும் பின் நின்று புண்படுத்தும் அவதூறு தாக்கிவிடும். - ஷேக்ஸ்பியர்[1]
- என் பெயரை வாளால் குத்துவோன் மாசு படுத்துவோன் என் உடலையும் குத்துவான். ஆனால், தூக்கு மரத்திற்கு அஞ்சுகிறான். -கிரவுன்[1]
- மனச்சான்று பரிசுத்தமாயிருக்கையில், அது கடுமையான துவேஷத்தையும், கடுமையான பழியையும் வென்றுவிடும். ஆனால், அதில் ஒரு மாசு அல்லது மறு இருந்துவிட்டால், வசைமொழிகள் செவிகளிலே சம்மட்டிகளைப் போலத் தாக்கும். - அலெக்ஸாண்டர் புஷ்கின்[1]
- ஒருவன் தன் கடமையை விடாமல் செய்துகொண்டு மெளனமாயிருப்பதே பழிக்குச் சரியான பதிலாகும் -ஸெஸில்[1]
- எதிரே இல்லாதவனைப்பற்றிப் புறங்கூறுவோன் பழி சொல்லி அவனுக்குத் தீங்கு செய்கிறான். அந்தப் பழி உண்மையானதா என்று தெரியுமுன்பே அதை நம்புவோனும் குற்றவாளியே. -ஹிரோடோட்டஸ்[1]
- அசட்டையாக விடப்பெற்ற அவதூறு தானே மறைந்துவிடும்: உனக்கு அதனால் வருத்தம் ஏற்பட்டதாக காட்டிக் கொண்டால், அது உண்மையாயிருக்கும் என்று நம்பும்படி செய்துவிடும். -டாஸிடஸ்[1]
- மற்றொருவனைப்பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால், நீ உன் செவியை அடைத்துக்கொள்.-குவார்லெஸ்[1]
- ஒரு பாவமும் அறியாதவர்களைக் கூடத் தைரியத்தை இழக்கும்படி செய்யும் சில அவதூறுகளும் இருக்கின்றன. - நெப்போலியன்[1]
- அவதூறுகளைக் கவனிப்பது அவசியம் என்று நான் ஒருபோதும் கருதுவதில்லை. அவை நெருப்புப் பொறிகள், நாம் அவைகளை ஊதிக் கணிய வைக்காவிட்டால் அவை தாமாகவே அவிந்து போகும். -போர்ஹேல்[1]
- அவதூறு கடல்களையும். மலைகளையும், பாலைவனங்களையும் எளிதில் தாண்டிச் செல்லும். - கோல்டன்[1]
- பொய்யைத் துரத்திக்கொண்டு ஓடாதே நீ அதை விட்டுவிட்டால், அது விரைவில் தானாகவே செத்துவிடும். -இ. நாட்[1]
- என்னைப்பற்றித் தவறாக எண்ணும்படி செய்ய முயன்றதற்காக அவதூறுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அது என்னை அதிக எச்சரிக்கையாயிருக்கும்படியும், என் செயல்களில் அதிகக் கவனமாயிருக்கும்படியும் செய்துள்ளது. - பென் ஜான்ஸன்[1]
- தீயவனும் புரட்டனுமே போலிப் புகழில் மகிழ்ச்சியடைவர் அவதூறுக்கு அஞ்சி நடுங்குவர். - ஹொரேஸ்[1]
- மற்றவர்களின் தீய நாவுகளை அடக்கி வைக்க நம்மால் இயலாது; ஆனால், நாம் முறையாக வாழ்ந்தால். அவர்களை அலட்சியமாக ஒதுக்கிவிடலாம். - கேட்டோ[1]
- பழிச்சொல்லை எவரும் அழைத்து வந்து இருக்க இடம் கொடாமலிருந்தால், அது தானாகவே வாடி மடிந்துவிடும். - லெய்ட்டன்[1]
- துவேஷமூட்டும் வதந்திகளையும். ஆராய்ந்து பாராத செய்திகளையும். புறம் கூறித் திரிபவனை உன் கொடிய பகைவர்களுள் முதன்மையானவனாக எண்ணிக்கொள். - லவேட்டர்[1]
- புறங்கூறுவோனையும். அவனுக்குச் செவி சாய்ப்பவனையும் சேர்த்துத் தூக்கிலிடவேண்டும். ஒருவன் நாவிலே கயிற்றைக் கட்டியும். ஒருவன் செவிகளிலே கயிற்றையும் கட்டித் தொங்கவிட வேண்டும். -ஸௌத்[1]
- திருட்டுச்சொத்தை வாங்குதல் தானே திருடியது போன்ற குற்றமாவது போல, அவதூறைக் கேட்டுக்கொண்டிருப்பதும் குற்றமாகும். - செஸ்டர்ஃபீல்டு [1]
- கோழை வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் முறைதான் அவதூறு. அதைப் பரப்புதலே அவனுக்குப் பாதுகாப்பு. - ஜான்ஸன்[1]
- வன விலங்குகளுள் அவதூறு பேசுவோனுடைய கடியும், வீட்டில் வளர்க்கும் விலங்குகளுள் இச்சகம் பேசுவோனுடைய கடியும் மிகவும் அபாயகரமானவை. - டயோகினிஸ்[1]
- மனப்பகையிலிருந்து அவதூறு தோன்றுவது போலச் செருக்கிலிருந்தும் தோன்றும். புறங்கூறுவோனை ஒரு நாகம் தீண்டினால், நாகமே மடியும். பல செவிகள் திறந்திராவிட்டால், பல வாய்களும் திறந்திருக்க மாட்டா. - பிஷப் ஹால்[1]
- கோள் சொல்பவன் புறங்கூறுவோனுக்குச் செவி சாய்க்க வேண்டாம்; அவன் மற்றவர்களின் அந்தரங்கங்களைக் கண்டுபிடித்து வெளியிடுவது போலவே உன்னிடத்தும் அடுத்த தடவை செய்வான். - சாக்ரடிஸ்[1]
- அவதுறை அடக்குவதற்கு அதை அலட்சியமாகத் தள்ளிவிடுவதே முறை. அதை எட்டிப் பிடித்து மறுக்க முயன்றால், ஓட்டத்தில் அது உன்னை முந்திவிடும். - அ டுமாஸ்[1]
- தன் எதிரியை இழிவு செய்வதற்காக ஏதாவது கதைகளைக் கட்டுவதற்குத் தேவையான கற்பனா சக்தி இல்லாதவன் எவனுமில்லை. - அடிஸன்[1]
- அறம் கூறான். அல்ல செயினும். ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. - திருவள்ளுவர்[1]
- புறம் கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின், சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும். - கிருவள்ளுவர்[1]
- பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். - திருவள்ளுவர்[1]
- கொலை ஒக்கும் கொண்டுகண் மாறல், - நான்மணிக்கடிகை[1]
- கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. - கொன்றை வேந்தன்[1]