ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன்
ஐரிய பிரித்தானிய அரசியல்வாதி, நாடக ஆசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர்.
ரிச்சர்ட் பிரின்ஸ்லி பட்லர் ஷெரிடன் (Richard Brinsley Sheridan 30, அக்டோபர், 1751 - 7 சூலை 1816) ஒரு ஐரிஷ் நகைச்சுவைப் பேச்சாளர், நாடக ஆசிரியர், கவிஞர், அரசியல்வாதி ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- உண்மையாயிருக்கத் தகாத விஷயத்தைப் பொய்யென்றே நம்பு.[1]
- கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான்.[2]
- ஆழ்ந்து சிந்தித்து ஆராயாதவர்கள் வாயால் உளற மட்டும் செய்வார்கள்.[3]
- வாழ்க்கை நல்ல முறையில் வாழப்பெற்றதா என்பதை ஆண்டுகளைக்கொண்டு கணக்கிடாமல், செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும்.[4]
- பெண்கள் நம்மை ஆட்சி புரிகின்றனர். அவர்கள் மேலும் நிறைவுடையவர்களாக விளங்கும்படி செய்வோம். அவர்கள் எவ்வளவுக்கு அறிவொளியைப் பெறுகின்றனரோ, அவ்வளவுக்கு நாம் அறிவு பெறுவோம். பெண்களின் மனங்களைப் பயிற்சி செய்வதையே ஆடவனின் அறிவு பொறுத்திருக்கின்றது.[5]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கருணை. நூல் 69 - 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 182. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190-191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278-281. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.