கருணை
கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும். அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல். அதுவே கடவுளின் இலட்சணம். நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும். -ஷேக்ஸ்பியர்[2]
- இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும்.-ஷேக்ஸ்பியர்[2]
- கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான். - ஷெரிடன்[2]
- தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் - பிறரிடத்தில். -கோல்டன்[2]
- கடவுளின் பிரதம லட்சணம் கருணையே. -பிளச்சர்[2]
- கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர். -ஜான்கே[2]
குறிப்புகள்
தொகு
- ↑ Khazan, Olga. It Pays to Be Nice.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கருணை. நூல் 69 - 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.