பென் ஜான்ஸன்

ஆங்கில எழுத்தாளர்

பெஞ்சமின் ஜான்சன் (Benjamin Jonson) (11 சூன் 1572 - 16 ஆகஸ்ட் 1637 ) ஒரு ஆங்கில புதின எழுத்தாளர், கவிஞர், நடிகர், இலக்கிய விமர்சகர் ஆவார்.

இவரது மேற்கோள்கள்

தொகு
  • என்னைப்பற்றித் தவறாக எண்ணும்படி செய்ய முயன்றதற்காக அவதூறுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அது என்னை அதிக எச்சரிக்கையாயிருக்கும்படியும், என் செயல்களில் அதிகக் கவனமாயிருக்கும்படியும் செய்துள்ளது.[1]
  • தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான்.[2]
  • நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றனர். அதில் நேர்பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவுமட்டுமே தேவை.[3]
  • வன விலங்குகளிலே கொடுங்கோலனிடமிருந்தும், பழக்கப்பட்ட விலங்குகளிலே வீண் புகழ்ச்சி பேசுபவனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்.[4]

குறிப்புகள்

தொகு
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நரகம். நூல் 37-38. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 99. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பென்_ஜான்ஸன்&oldid=20367" இலிருந்து மீள்விக்கப்பட்டது