பப்லியஸ் (அல்லது கயஸ்) கொர்னேலியஸ் டாசிட்டஸ் (Publius (or Gaius) Cornelius Tacitus, c. AD 56 - c. 120) என்பவர் ஒரு ரோமானிய வரலாற்றாசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். டசிட்டஸ் மிகச் சிறந்த ரோமானிய வரலாற்றாசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
 • அசட்டையாக விடப்பெற்ற அவதூறு தானே மறைந்துவிடும்: உனக்கு அதனால் வருத்தம் ஏற்பட்டதாக காட்டிக் கொண்டால், அது உண்மையாயிருக்கும் என்று நம்பும்படி செய்துவிடும்.[1]
 • அக்கிரமத்தின் மூலம் பெற்ற அதிகாரம். எந்த நன்மையான காரியத்திற்கோ. பயனுள்ள வேலைக்கோ உபயோகிக்கப்படுவதில்லை.[2]
 • கொடுமையை எதிர்க்கும் ஆசை மனிதனுடைய இயல்பில் அமைந்துள்ளது.[3]
 • அரசாங்கம் மிகவும் ஊழலாய்ப் போயிருந்தால், அப்போது சட்டங்கள் அளவுக்கதிகமாகும்.[4]
 • செழுமை நற்பண்பின் உரைகல். ஏனெனில், இன்பத்தால் நலிவடையாமல் இருப்பதைவிடத் துன்பங்களைத் தாங்குதல் அதிகக் கஷ்டம்.[5]
 • ஆட்சி புரியும் ஒருவன், தனக்கு அடுத்தாற்போல் பட்டத்திற்குரியவனிடத்தில் எப்பொழுதும் சந்தேகமும், துவேஷமும் கொண்டிருப்பான்.[6]
 • விசேஷ அறிவாற்றல்களால் அவன் வெற்றியடையவில்லை. ஆனால், வியாபாரத்திற்கு வேண்டிய அளவு - அதற்கு மேற் போகாத அளவு - திறமை அவனிடம் இருந்தது.[7]

மேற்கோள்கள்

தொகு
 1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 167. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 290-291. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=டாஸிடஸ்&oldid=35775" இலிருந்து மீள்விக்கப்பட்டது