ஆற்றல் குறித்த மேற்கோள்கள்

  • நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலைப் பெற்றதாகும் ஒரு பயிற்சி கைவரப்பெற வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானித்துவிட்டால், அது வந்தது போலத்தான். - சாமுவேல் ஸ்மைல்ஸ்[1]
  • இந்த உலகில் செய்யக்கூடிய எந்தக் காரியத்தையும் ஆற்றல் செய்து முடித்துவிடும். - கதே[1]
  • உங்களுடைய ஆற்றல்கள் வீணாவதில் எச்சரிகையாயிருங்கள்: அவைகளை ஒன்றுசேர்த்து வைத்துக்கொள்ள இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பேரறிவுள்ளவர்கள் மற்றவர்கள் செய்வனவற்றையெல்லாம் தாங்களும் செய்ய முடியும் என்று கருதுவார்கள்: ஆனால், பின்னால் வருந்துவார்கள். - கதே[1]
  • நமக்கு வேண்டிய பரிகாரங்கள் நம்மிடமே இருக்கின்றன. அவை வானின் விதி என்று நாம் கூறுகின்றது விதிக்குக் காரணமான வானம் நம் விருப்பம் போல் செய்ய உரிமையளிக்கின்றது. நாம் சோம்பலாகவும் திட்டமிடுவதில் தாமதமாகவும் இருப்பதே நம்மைப் பின்னால் இழுக்கின்றது. - ஷேக்ஸ்பியர்[1]
  • பொதுவாகத் தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதி யாகத் தீர்மானித்தலே -நெப்போலியன்[1]
  • போரிலேகூடப் புற ஆற்றலினும் மன ஆற்றல் மூன்று மடங்காகும். - நெப்போலியன்[1]
  • ஆற்றலுடன் ஊக்கமாக உழைப்பதைப்போல வாழ்க்கையில் வேறு அறிவுக்கூர்மை எதுவுமில்லை. - மிச்செல்[1]
  • உறுதி சர்வ வல்லமையுள்ளது. உலகில் ஒரு ஸ்தானத்தை அடையவேண்டும் என்று நீ உறுதி செய்துகொண்டால், அதை நீ நீச்சயமாக அடைவாய். -ஜே. ஹாஸ்[1]
  • பொறுப்புகள் தம்மைக் தாங்கக்கூடியவனைத் தேடிச் செல்கின்றன. எப்படிச் செய்வது என்பதை அறிந்தவனிடம் ஆற்றல் பாய்ந்து செல்கின்றது. - இ. ஹப்பார்டு[1]
  • சர்வதேசக் குழப்பம் ஏற்படுவதற்கு அடிப்படையாக உள்ள மனிதர்கள் அச்சத்திற்கும் துவேஷத்திற்கும் இடம் கொடுப்பதாகும். பொருளாதாரத்தகராறுகளுக்கும் இதுவே அடிப்படை பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஆசைக்கும் அச்சமே காரணம். மனிதர்கள் ஆதிக்கம் பெற விரும்புகின்றனர். ஏனெனில், மற்றவர்களுடைய ஆதிக்கம் தங்களுக்கு எதிராக அநீதியாக உபயோகிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். - பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்[1]
  • அதிகாரமும் சுதந்தரமும் சூடும் குளிர்ச்சியும் போன்றவை. இரண்டும் தக்க அளவில் நன்றாகக் கலந்திருந்தால், எல்லாம் நன்மையாகும்; இரண்டனுள் ஒன்று தனித்திருந்தால், அது அழிவை உண்டாக்கும். - ஸவில்லி[1]
  • அக்கிரமத்தின் மூலம் பெற்ற அதிகாரம். எந்த நன்மையான காரியத்திற்கோ. பயனுள்ள வேலைக்கோ உபயோகிக்கப்படுவதில்லை. - டாஸிடஸ்[1]
  • மது தலைகளைக் கிறங்கச் செய்வது போல, அதிகாரம் சிறந்த இதயங்களைக்கூட வெறிகொள்ளச் செய்யும். எல்லையற்ற அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு எந்த மனிதனும் போதிய அளவு அறிவைப் பெற்றிருக்கவில்லை. அந்த அளவுக்கு நல்லவனும் கிடையாது. -கோல்டன்[1]
  • அதிகாரமில்லாத நீதி திறமையற்றது. நீதியில்லாத அதிகாயம் கொடுமையாகும். ஆதலால், நீதியும் அதிகாரமும் சேர்ந்திருக்கும்படி செய்யவேண்டும். அதன் மூலம் நீதியானது எதுவும் வலிமை பெற்றிருக்கவேண்டும். வலிமையுள்ளது எதுவும் நீதியாயிருக்க வேண்டும். - பாஸ்கல்[1]
  • அநீதி, ஏமாற்று. துரோகம் ஆகியவற்றின் மீது நிலையான அதிகாரத்தை அமைக்க முடியாது. -டெமாஸ்தனிஸ்[1]
  • பலர் கையிலுள்ள அதிகாரம் சிலர் கையில் போய்க் குவிந்து கொண்டே இருக்கும். பொதுமக்களின் சுதந்தரத்தில் நாள்தோறும் கண்ணும் கருத்துமாயிருந்து கவனிக்க வேண்டும் இல்லாவிடில் அது உளுத்துப்போகும் - வெண்டல் ஃபிலிப்ஸ்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆற்றல்&oldid=19960" இலிருந்து மீள்விக்கப்பட்டது