பொறாமை
பொறாமை அல்லது அழுக்காறு என்பது ஒரு உணர்ச்சி ஆகும். பொதுவாக பாதுகாப்பின்மை, பயம், பதட்டம் ஆகியவற்றின் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் குறிக்கிறது. பொறாமையானது பெரும்பாலும் கோபம், சோகம் மற்றும் வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் கலவையாகும்.
மேற்கோள்கள்
தொகு- பொமையின் கண்களுக்குச் சிறு பொருள்களெல்லாம் மிகப் பெரியவைகளாகவும். குள்ளர்கள் பெரிய அசுரர்களாகவும், சந்தேகங்களெல்லாம் உண்மையாகவும் தோன்றும். - செர்வான்டிஸ்[1]
- பொறாமை முழுவதையும் ஆரம்பத்திலேயே கழுத்தை நெரித்துவிட வேண்டும். இல்லையெனில், அது வலிமையடைந்து உண்மையை வென்றுவிடும். - டேவனன்ட்[1]
- ஆட்சி புரியும் ஒருவன், தனக்கு அடுத்தாற்போல் பட்டத்திற்குரியவனிடத்தில் எப்பொழுதும் சந்தேகமும், துவேஷமும் கொண்டிருப்பான். - டாஸிடஸ்[1]
- தன் அண்டை வீட்டுக்காரனின் நற்குணத்தைப்பற்றிக் கேள்விப்படும்பொழுது எவன் வருத்தமடைகிறானோ, அவன் அதற்கு மாறான செய்தியைக் கேட்க இன்புறுவான். தங்களுடைய பண்புகளைக் கொண்டு புகழ் பெற முடியாதவர்கள். மற்றவர்களும் தங்கள் நிலைக்குத் தாழ்த்தப்பெற்றால், மகிழ்ச்சியடைவர்.[1]
- பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்பொழுதும் உணர்ந்திருப்பான். - பிளினி[1]
- அந்துப்பூச்சி ஆடையை அரிப்பது போல், அழுக்காறு மனிதனை அரித்துவிடும். - கிரிஸோஸ்டம்[1]
- அடுத்த வீட்டுக்காரன் வெற்றியடைவதில் பொறாமைக்காரன் உடல் மெலிவான். - ஹொரேஸ்[1]
- அழுக்காறு உடையார்க்கு அதுசாலும், ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது. - திருவள்ளுவர்[1]
- அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். - திருவள்ளுவர்[1]