விளாதிமிர் லெனின்

ருசிய அரசியல்வாதி, பொதுவுடைமை தத்துவவாதி மற்றும் சோவியத் யூனியனின் தோற்றுனர்

விளாதிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин , ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

விளாதிமிர் இலீச் லெனின்

மேற்கோள்கள்

தொகு

கட்சி உறுப்பினர் ஆவதற்குதகுதி என்ன?

தொகு

வேலை நிறுத்தத் தில் பங்கேற்பது மட்டுமே கட்சி உறுப்பினர் ஆவதற்கு தகுதி அல்ல. கீழ்கண்ட தகுதிகளும் இருத்தல் வேண்டும்

  • கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும்.
  • கட்சியின் கூட்டு முடிவுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • சமூக மாற்றத்திற்காக இடை விடாது பணியாற்ற வேண்டும்.

ஸ்தாபனம்

தொகு
  • தொழிலாளி வர்க்கம் வெல்ல முடியாத சக்தியாக உருவாக வேண்டுமெனில் மார்க்சிய அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை ஸ்தாபன ஒற்றுமை மூலம் செழுமைப்பட வேண்டும்” ஏனெனில் “மூலதனத்தை எதிர்த்து போராடும் உழைக்கும் மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் ஸ்தாபனம் தான்.

ஏகாதிபத்தியம்

தொகு
  • ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்.
  • உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது.

காந்தி லெனின் ஒப்பீடு

தொகு
  • லெனின் வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட பெரிய ஆல்ப்ஸ் மலையாகவே தோன்றுவார். காந்தியோ அட்டையில் செய்யப்பட்ட செயற்கை மலையாகவும், வேகமாக உடைந்து சிதறுகிறவராகவும், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் அறவே மறக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைக்கூடையில் மட்டுமே இடம்பெற்றவராகவும் தோன்றக்கூடும். விலையுயர்ந்த உலோகங்களையும் அவற்றைப் போலவே தோற்றம் தரும் போலிகளையும் காலமும் சம்பவங்களும்தான் பிரித்துக் காட்டுகின்றன!” - இவான் மெய்ஸ்கி சோவியத் உருசியாவின் பிரித்தானிய தூதராக 1932 முதல் 1943 வரையில் பதவி வகித்தவர் (காங்கிரஸிலிருந்து காந்தி (தற்காலிகமாக) விலகிவிட்டார் என்ற செய்திக்குப் பிறகு, 04.11.1934- இல் தனது நாட்குறிப்பில் மெய்ஸ்கி பதிவுசெய்தது)[1]
  • “காந்தி தனிப்பட்ட முறையில் நேர்மையாளராக இருந்தாலும் பிற்போக்கான சிந்தனையாளர், மதத்திலும் தனிமனிதர்களின் மனசாட்சி மீதும் நம்பிக்கை வைப்பவர். லெனினோ பொருளாதார ஒடுக்குமுறைகளுக்குக் கட்டமைப்பிலேயே நிலவும் காரணங்கள் எவையென்று அறிந்தவர். அனைத்து மக்களையும் திரட்டி அந்தச் சுரண்டலுக்கு முடிவுகட்ட முயன்றவர். கடந்துவிட்ட பழைய காலத்தை மீண்டும் உருவாக்க முயல்கிறவர் காந்தி. நவீன நாகரிகத்தில் கிடைத்த சாதனைகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுபவர் லெனின்” - ஸ்ரீபாத அம்ரித் டாங்கே (இவர் 1921 இல் எழுதிய ‘காந்தியும் லெனினும்’ என்ற சிறு நூலில்)[1]
  • “சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இந்த பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற உடோப்பிய முறை இத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த முறையால் எந்தவிதப் பலனும் இல்லை என்று வளர்ந்துவரும் இளைய சமுதாயம் சந்தேகமே இல்லாமல் நன்கு உணர்ந்திருக்கிறது” “காந்தியைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிட்டு, லெனின் காட்டும் வன்முறை சார்ந்த புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுங்கள்“ பகத் சிங் (நாடாளுமன்றத்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதற்காக கைதுக்குப் பிறகு விடுத்த அறிக்கையில்.)[1]
  • “இருவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இரண்டு பெரிய நாடுகளுக்கு இருவருமே புதியதொரு திசையைக் காட்டியுள்ளனர். லெனின் 53 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் மட்டும் காந்தியைப் போல நீண்ட நாட்களுக்கு வாழ்ந்திருந்தால் ஸ்டாலினும் வந்திருக்க மாட்டார். ஹிட்லர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா?” _ இலக்கிய விமர்சகர் சிரில் கானாலி (லண்டனிலிருந்து வெளிவந்த ‘சண்டே டைம்ஸ்’ இதழில் 1972 ஜனவரியில் எழுதிய கட்டுரையில்)[1]
  • படித்தவர்கள் - பாமரர்கள் என்று அனைவரிடையேயும், இறப்புக்குப் பிறகு காந்தியின் புகழ், லெனினுடைய புகழைவிட அதிகம். தார்மீக, அரசியல் முன்னோடி, வெவ்வேறு மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் யார் என்றால், அது அகிம்சையைப் போதித்த காந்தியாகத்தான் இருக்க முடியுமே தவிர, ‘ஆயுதம் எடுத்துப் போரிடுங்கள், வர்க்கங்களுக்கிடையே போர் நடக்கட்டும்’ என்று கூறிய லெனின் அல்ல என்பது என்னுடைய கருத்து. -ராமசந்திர குகா வரலாற்றாளர் (காந்தி லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு கட்டுரையில்)[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு. தி இந்து. Retrieved on 30 சனவரி 2020. ராமசந்திர குஹா

வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


தெரிவுசெய்யப்பட்ட ஆக்கங்கள்
"https://ta.wikiquote.org/w/index.php?title=விளாதிமிர்_லெனின்&oldid=17690" இலிருந்து மீள்விக்கப்பட்டது