பகத் சிங்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த பக்கங்களில் பகத் சிங்கின் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியாவர், இந்தியாவில் மார்க்சியத்தைப் பேசிய முதல்வருகளில் ஒருவர். இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

பகத் சிங்

மேற்கோள்கள்தொகு

 • நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.[1]
 • தனி நபர்களைக் கொல்வது எளிது, ஆனால் உங்களால் கருத்துகளைக் கொல்ல முடியாது.
 • கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது.[2]
 • அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக் கூடியதும், மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாக்கக் கூடியதுமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலிகள் தவிர்க்க இயலாதவை.
 • சரியான கல்வியும் புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவரால் கூட புரிந்து கொள்ள முடியாத சம்ஸ்கிருத ஸ்லோகங்களும் முதல் தரமான அராபிய இலக்கியங்களின் வரிகளும், எளிய மொழியில் சொல்லப்படும் எளிய வாசகங்கள் தரும் உற்சாகத்தைத் தருவதில்லை.
 • புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்.[3]
 • புரட்சியாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.[3]
 • எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று உங்கள் கடவுள் சொல்வார்.[3]
 • அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.[3]
 • “சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இந்த பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற உடோப்பிய முறை இத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த முறையால் எந்தவிதப் பலனும் இல்லை என்று வளர்ந்துவரும் இளைய சமுதாயம் சந்தேகமே இல்லாமல் நன்கு உணர்ந்திருக்கிறது” “காந்தியைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிட்டு, லெனின் காட்டும் வன்முறை சார்ந்த புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுங்கள்“ (நாடாளுமன்றத்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதற்காக கைதுக்குப் பிறகு விடுத்த அறிக்கையில்.)[4]

சான்றுகள்தொகு

 1. தூக்கிலேற்றப்படுவதற்கு முந்தைய நாள் தன் சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில்
 2. பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய பிறகு வீசி எறியப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இருந்த வார்த்தைகள்.
 3. 3.0 3.1 3.2 3.3 Without Fear: The Life & Trial of Bhagat Singh by Kuldeep nayar என்ற புத்தகத்தில் இருந்து
 4. லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு. தி இந்து. Retrieved on 30 சனவரி 2020. ராமசந்திர குஹா

புற இணைப்புகள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பகத்_சிங்&oldid=17689" இருந்து மீள்விக்கப்பட்டது