கடன் கொடுத்தல்

கடன் கொடுத்தல் என்பது பொதுவாக நிதியத்தில் திருப்பி செலுத்தவேண்டியதாக தனி நபருக்குகோ, நிறுவனத்துக்கோ கொடுக்கப்படுவது ஆகும். வழக்கமாக அந்தக் கடனுக்கு வட்டி செலுத்த வேண்டிய பொறுப்பும், அதைத் திருப்பிச் செலுத்தப்படுவதோடு கடன் வாங்கிய அசல் தொகையையும் திருப்பிச் செலுத்தவேண்டியது கடன் வாங்கியவரைச் சேரும்.

மேற்கோள்கள்

தொகு
  • நீ ஒரு நபருக்குக் கடன் கொடுத்தால், உன் சொந்தக் காரியம் எதற்கும் அந்தப் பணம் உதவாமற்போகிறது. நீ அதைத் திரும்பக் கேட்டால், உன்னுடைய அன்பு காரணமாகவே அந்த நண்பன் உனக்கும் பகைவனாக மாறியிருப்பான் மேலும் வற்புறுத்திக் கேட்டால், ஒன்று. நீ பணத்தை இழக்வேண்டும். அல்லது அந்த நண்பனை இழக்க வேண்டும். - பிளாட்டன் [1]
  • நீ கடன் வாங்குபவனாகவோ, கொடுப்பவனாகவோ இருக்க வேண்டாம்; ஏனெனில், கடன் பெரும்பாலும் தன்னையும் இழந்து. ஒரு நண்பனையும் இழக்கச்செய்கின்றது. - ஷேக்ஸ்பியர் [1]
  • உன் சக்திக்கு மீறிய அளவில் கடன் கொடுக்க வேண்டாம், உன்னால் இயன்றதைக் கொடுக்க மறுக்கவும் வேண்டாம். - பென்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 146-147. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கடன்_கொடுத்தல்&oldid=20737" இலிருந்து மீள்விக்கப்பட்டது