வீடுபேறு

(மோட்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வீடுபேறு அல்லது மோட்சம் என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்கில் இறுதியானது என இந்து சமயம் சொல்கிறது. அவையாவன: தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் மற்றும் இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் {விதேக முக்தி} ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  • அன்பும் அறமும் எவ்வளவோ, சுவர்க்கமும் அவ்வளவே. -பார்க்கர்[1]
  • சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும். - வில்லியம் ஷேக்ஸ்பியர்[1]
  • அறம் விரும்பு; அதுவே வீடு. -மில்டன்[1]
  • மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம். -பேக்கன்[1]
  • நான் சுவர்க்கத்தில் இருக்கவேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும். -ஸ்டான்போர்டு[1]
  • ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை. ஆனால், அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான். -வான் டைக்[1]
  • சுவர்க்கத்துக்கு வெகு தூரத்தில் உள்ளது பூமி, பூமிக்கு வெகு சமீபத்தில் உள்ளது சுவர்க்கம். -ஹேர்[1]
  • வாழ்வில் கற்க வேண்டிய கடின பாடங்களில் ஒன்றுண்டு. அதைப் பெரும்பாலோர் கற்பதில்லை. இங்கேயே நம்மைக் சூழ்ந்தே சுவர்க்கம் உளது என்பதே அந்தப் பாடம். -ஜான் பரோஸ்[1]
  • அறநெறி பற்றிப் பேசுவதன்று, அறநெறியில் நடப்பதுவே கவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். -எம். ஹென்றி[1]
  • உயிரோடு இருக்கும்பொழுது தன் இதயத்தை சுவர்க்கத்துக்கு அனுப்பாதவன், உயிர் போனபின் சுவர்க்கத்துக்குப் போக முடியாது. -பிஷப் வில்ஸன்[1]
  • எப்பொழுதும் நியாயம் வழங்கும் வள்ளல்கள், எப்பொழுதும் வண்மை உடைய நீதிமான்கள், இவர்கள் முன்கூட்டி அறிவியாமலே கடவுள் சன்னிதானத்துக்குப் போகலாம். -பழமொழி[1]
  • சுவர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் பதினைந்து நிமிஷமாவது நரக அனுபவம் தேவை. -கார்ல்டன்[1]
  • வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது. -புதுமைப்பித்தன்[2]

மேற்கோள்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மோட்சம். நூல் 36- 37. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 28-63. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வீடுபேறு&oldid=19878" இலிருந்து மீள்விக்கப்பட்டது