மன உறுதியின்மை

மன உறுதியின்மை அல்லது மனத்திடமின்மை என்பது குறித்த மேற்கோள்கள்

  • ஊசலாடிக்கொண்டிருக்கும் மனத்தைப் பெற்றிருத்தல் இழிவாகும். - டியூரிபிடிஸ்[1]
  • முன்னும் போகாமல், பின்னும் போகாமல் நிலையாக நிற்பது சங்கடமான விஷயம்; அது சிலந்தியின் வாழ்க்கையாகும். - ஸ்விஃப்ட்[1]
  • வாழ்க்கைத் திட்டங்களைப்பற்றி உறுதியின்மையும். அவைகளை இடைவிடாமல் பின்பற்றிச் செல்லாமையும் நம் துயரங்களுக்கெல்லாம் உரிய காரணங்களுள் முதன்மையானவை. - அடிசன்[1]
  • இரண்டு வேலைகளுக்காகப் புறப்படும் மனிதனைப் போல. நான் எதில் தொடங்குவது என்று தயங்கி நிற்கிறேன். அதனால் இரண்டையும் கைவிடுகிறேன். - ஷேக்ஸ்பியர்[1]
  • அடிக்கடி மாறுதலை விரும்பும் மனிதர்கள் மனவலிமையற்றவர்கள். ஆனால், அவர்கள் கடின இதயம் படைத்தவர்கள். - ரஸ்கின்[1]
  • எதையும் திடீரெனத் தொடங்கி, எதிலும் நீடித்து நிற்க மாட்டாதவர் பலர் - டிரைடன்[1]
  • அரைகுறையான வேலைகளை நான் வெறுக்கிறேன். சரியாயிருந்தால், அதைத் தைரியமாய்ச் செய். அது தவறாயிருந்தால், அதைச் செய்யாமல் விடு. - ஜில்பின்[1]
  • மனிதர்கள் தாங்கள் செய்யாத வேலைகளைப்பற்றி முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு, அவர்கள் செய்ய வேண்டியவைகளில் தீவிரமாக இறங்க முடியும். - மென்ஷியஸ்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 299. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மன_உறுதியின்மை&oldid=35524" இலிருந்து மீள்விக்கப்பட்டது