ஆலோசனை (Advice) குறித்த மேற்கோள்கள்

  • நல்ல ஆலோசனையைக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும். -கதே[1]
  • உணர்ச்சி தணிந்துவரும் சந்தர்ப்பம் பார்த்து நல்ல உபதேசங்களைச் சொல்ல வேண்டும். ஷேக்ஸ்பியர்[1]
  • நாம் வாளி வாளியாகப் பிறருக்கு ஆலோசனை சொல்லுவோம். ஆனால், பிறருடைய ஆலோசனையில் நாம் குண்டுமணி அளவே எடுத்துக்கொள்வோம். -ஆல்ஜெர்[1]
  • நண்பர்களுக்கு அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைகளைச் சொல்லவேண்டாம், அவர்களுக்கு மிகுந்த நன்மையளிப்பவைகளையே சொல்லுங்கள். -டக்கர்மன்[1]
  • ஆலோசனைகளும், கண்டனமும் மென்மையாயிருக்க வேண்டும். வருத்தமுண்டாக்கும் உண்மைகளை, இதமான சொற்களில் கூற வேண்டும். பயனளிக்க வேண்டிய அளவுக்கு மேல் கூறவும் கூடாது. - பெர்சிவல்[1]
  • உங்களிடம் ஆலோசனை கேட்கவருபவன் நீங்கள் அவனைப் புகழ்ந்து பேசவே விரும்புகிறான். - செஸ்டர்ஃபீல்டு[1]
  • நல்ல ஆலோசனைமட்டும் சொல்பவன் ஒரு கையால் கட்டடம் கட்டுகிறான். நல்ல ஆலோசனையுடன் தன் நடத்தையையும் மாதிரியாகக் காட்டுபவன் இரு கைகளால் கட்டுகிறான் நல்ல முறையில் கண்டித்துவிட்டுத் தனது தவறான நடத்தையைக் காட்டுபவன் ஒரு கையால் கட்டியதை மறு கையால் உடைப்பவனாவான். - பேக்கன்[1]
  • நாம் செழிப்புடன் சுகமாயிருக்கும் பொழுது துயரத்தில் வாடுபவர்களுக்கு ஆலோசனை கூறுதல் எளிது. - ஈஸ்ச்சிலன்[1]
  • பொழிந்துஇனிது நாறினும், பூமிசைதல் செல்லாது
    இழிந்தவை காமுறுஉம் ஈப்போல் - இழிந்தவை
    தாம்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
    தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு. - நாலடியார்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 91-92. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆலோசனை&oldid=20230" இலிருந்து மீள்விக்கப்பட்டது