வழக்கறிஞர்
வழக்கறிஞர் அல்லது வக்கீல் அல்லது வழக்குரைஞர் என்பவர் பிளாகின் சட்ட அகராதியின் படி, "சட்டம் கற்றுக்கொண்ட ஒரு நபர்; ஒரு சட்ட வல்லுனராக, வழக்கறிஞராக அல்லது சட்ட ஆலோசகராக; சட்ட பயிற்சி பெற்ற ஒரு நபர்.
மேற்கோள்கள்
தொகு- ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
- சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதமே ஒளி விளக்கு -அண்ணாதுரை
- வக்கீல்கள் நியாயம், அநியாயம் என்றில்லாமல், எல்லா வழக்குகளையும் ஆதரித்துப் பேசவேண்டியிருக்கின்றது. - ஜூனியஸ்[2]
- வழக்காடும் எதிரிகள், வல்லமையுடன் போராடுகிறார்கள். ஆனால், உண்பதிலும் பருகுவதிலும் அவர்கள் நண்பர்களைப் போலவே நடக்கின்றனர். - ஷேக்ஸ்பியர்[2]
குறிப்புகள்
தொகு- ↑ தமிழருவி மணியன் (25 டிசம்பர் 2013). ராஜாஜி என்ற ராஜரிஷி. தி இந்து. Retrieved on 6 சூலை 2016.
- ↑ 2.0 2.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 309-310. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.