முன்யோசனை (Forethought) என்பது குறித்த மேற்கோள்கள்

  • குறைவான முன்யோசனை மூடனின் செயல்; கூடுதலான முன்யோசனை துயரம் நிறைந்தவன் செயல், - ஸெஸில் [1]
  • சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கின்றது. - பக்ஸ்டன்[1]
  • அதிதீவிர ஆசையினால் வெற்றி பெறும் காரியங்கள் மிகச் சிலவே. அமைதியான முன்யோசனையினால் வெற்றி பெறுபவை மிகப்பல. - தூசிடைடஸ்[1]
  • தூத்திலுள்ளதைப்பற்றிச் சிந்தனை செய்யாத மனிதன், தன் அருகிலேயே சோகம் தங்கியிருப்பதைக் கண்டுகொள்வான். - கன்ஃபூஷியஸ்[1]
  • மிகவும் அதிகக் கவனமாயிருப்பவன் செய்து முடிப்பது கொஞ்சமாய்த்தானிருக்கும். - ஷில்லர்[1]
  • நன்றாகவும் கவனமாகவும் செய்யப்பெற்ற காரியங்களைப்பற்றி அஞ்ச வேண்டியதில்லை. -ஷேக்ஸ்பியர்[1]
  • உன் வாயையும் பணப்பையையும் கவனமாய்த் திற, உன் செல்வத்தையும் புகழையும் பற்றி வெளியே நல்ல மதிப்பிருக்கும். - ஸிம்மர்மன்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 304. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=முன்யோசனை&oldid=35639" இலிருந்து மீள்விக்கப்பட்டது