கேலி
ஏளனம், பரிகாசம், கேலி குறித்த மேற்கோள்கள்.
- துன்பம் நேர்ந்த காலத்தில் நல்ல கேலிப் பேச்சு உணவும் பானமும் போன்றது. - வேர்[1]
- சாதாரணமாக ஒரு முறை கேலி பேசுவது நல்லது. ஆனால், கேலியைத் தொழிலாக வைத்துக்கொள்ளக்கூடாது. - ஃபுல்லர்[1]
- கேலியைக் கண்டு பயப்பட வேண்டாம் உன்மீது ஒருவன் உப்பை அள்ளிப் போட்டால், உன்மீது புண்கள் இருந்தாலன்றி, உனக்கு ஒரு தீங்கும் நேராது. - ஜூனியஸ்[1]
- வேடிக்கைப் பேச்சால் அடிக்கடி ஒரு நண்பனை இழக்க நேரும். ஆனால், அது பகைவனை உண்டாக்காது. - ஷிஸிம்மன்ஸ்[1]
- கேலியின் பெருமை கேட்பவரின் செவியைப் பொறுத்தது. ஒரு போதும் சொல்பவர் நாவில்லை. - ஷேக்ஸ்பியர்[1]
- சிரித்து முடிந்த பிறகு கேலிப் பேச்சை மதிப்பிடு. - டபுள்யு. லாயிட்[1]
- கேலி பேசுவதில் எச்சரிக்கையாயிருக்கவும் கேலியால் பலர் பெரு நஷ்டமடைந்துள்ளனர்.[1]