தாமஸ் புல்லர்
ஆங்கிலபோதகர், வரலாற்றாளர், அறிஞர்
தாமஸ் புல்லர் (Thomas Fuller, முழுக்காட்டுதல் 19 ஜூன் 1608 - 16 ஆகஸ்ட் 1661) ஒரு ஆங்கில போதகர், வரலாற்றாசிரியர் மற்றும் அறிஞர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ஒன்றைத் தெரிந்துகொள்ள ஆத்திரப்படுதல் அல்லது அவாவினால் தூண்டப்படுதல் என்பது, விலக்கப்பட்ட கனியுள் இருக்கும் கொட்டை போன்றது. இயற்கையால் மனிதனின் தொண்டையில் அது ஒட்டிக்கொள்கின்றது. சில சமயங்களில் அவன் மூச்சையும் அது அடைத்துவிடுகின்றது - ஃபுல்லர்[1]
- நீ அறிவு பெற்றிருந்தால், அந்தச் சுடரில் மற்றவர்களும் தங்கள் விளக்குகளை ஏற்றிக்கொள்ளட்டும்.[2]
சமய போதனை
தொகு- ஆன்மாவிலிருந்து வெளிவரும் உபதேசமே ஆன்மாவைக் கவர்ச்சி செய்யும்.[3]
- கவிதை, சொற்களின் இசை.[4]
- சாதாரணமாக ஒரு முறை கேலி பேசுவது நல்லது. ஆனால், கேலியைத் தொழிலாக வைத்துக்கொள்ளக்கூடாது.[5]
- அட்டவணையில்லாத நூல். ஊசியில்லாத திசைகாட்டும் கருவி போன்றது. அதனால் திகைப்பு அதிகமாகுமேயன்றி. திசை தெளிவாகத் தெரியாது.[6]
- அட்டவணை அவசியமான உதவி: அது இல்லாவிட்டால், ஒரு பெரிய ஆசிரியரின் நூல் உள்ளே நுழைய முடியாத காடாகவே இருக்கும்.[6]
- உன் தங்கம் கையிலிருந்தாலும் இருக்கட்டும். அதை இதயத்தில் பதித்துவிட வேண்டாம்.[7]
- ஒழுக்கம் ஆன்மாவை நலமுறச் செய்யும். ஆனால், தருக்க நூல் அறிவின் ஆயுதசாலை, அதில் தாக்குவதற்கும் தற்காப்புக்கும் உரிய எல்லா ஆயுதங்களும் இருக்கும்.[8]
- பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே நீ கொடுப்பது நின்றால், அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்றுவிடுவர்.[9]
- நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும் முடிவில் வெறுப்பை உண்டாக்கும்.[10]
- நீ உன் நாட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னால் உன் நாட்டில் பெரும் பாகத்தை நன்றாகத் தெரிந்துகொள்.[11]
- பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியைவிட உயர்ந்தவராவோம். [12]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 66-67. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 175. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 157-158. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164-165. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 6.0 6.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -18. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 245. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268-269. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.