அறிவதில் ஆத்திரம்
அறிவதில் ஆத்திரம் குறித்த மேற்கோள்கள்
- ஒன்றைத் தெரிந்துகொள்ள ஆத்திரப்படுதல் அல்லது அவாவினால் தூண்டப்படுதல் என்பது, விலக்கப்பட்ட கனியுள் இருக்கும் கொட்டை போன்றது. இயற்கையால் மனிதனின் தொண்டையில் அது ஒட்டிக்கொள்கின்றது. சில சமயங்களில் அவன் மூச்சையும் அது அடைத்துவிடுகின்றது - ஃபுல்லர்[1]
- பழங்காலத்தில் ‘உன்னை அறிந்துகொள்' என்ற வாக்கியமே மிகவும் பிரபலமாயிருந்தது. தற்காலத்தில் 'உன் அண்டை வீட்டுக்காரரைத் தெரிந்துகொள்வதோடு, அவரைப்பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவும்’ என்ற வாக்கியம் பழைய வாக்கியத்திற்குப் பதிலாக வந்துவிட்டது. - ஜான்ஸன்[1]
- ஆத்திரமாக அறிய விரும்புகிறவர்களிடம் பேசினால், அப்பேச்சின் விஷயத்தை அவர்கள் சொந்தத்திற்கு உபயோகிப்பதில்லை. புனலைப்போல. வேறு ஒருவருக்கு அதை அளிப்பார்கள். (புனல்-ஏந்து குழல்) - ஸ்டீல்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 66-67. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.