நன்றி மறத்தல்

மனித உணர்வு

நன்றி மறத்தல் என்பது ஒருவர் செய்த உதவியை மறந்து அவருக்கு நன்றியில்லாம் இருத்தலாகும்.

  • நன்றி மறத்தலை விலங்குகள் மனிதனுக்கு விட்டுவிடுகின்றன. - கோல்டன்[1]
  • மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் எந்தத் தீமையைக்காட்டிலும். நன்றி மறத்தலை நான் மிகவும் வெறுக்கிறேன். அத்தீமைகள் நம் உதிரத்தைப் பாழாக்குகின்றன. -ஷேக்ஸ்பியர்[1]
  • நன்றியற்ற குழந்தையைப் பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட எவ்வளவு கூர்மையானது. - ஷேக்ஸ்பியர்[1]
  • நன்றி கெட்ட மனிதனைவிட ஒரு நன்றியுள்ள நாய் மேலானது. -ஸாஅதி[1]
  • நன்றியின்மை வீரத்திற்குவிடமாகும். - ஸர். பி. ஸிட்னி[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 232-233. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நன்றி_மறத்தல்&oldid=21821" இலிருந்து மீள்விக்கப்பட்டது