சொற்கள்

மொழியில் பொருள் தரும் அடிப்படைக்கூறு

சொற்களை (Words) என்பவை ஏதொன்றையும் குறிக்க பயன்படும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  • சூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும். -ஸதே[1]
  • நன்றாய்ப் பேசும் ஆற்றல் இன்மையும், நாவை அடக்கும் ஆற்றல் இன்மையும் பெரிய துர் அதிர்ஷ்டங்களாகும் -லா புரூயர்[1]
  • சபையில் பேசாத காரணம் என்ன? முட்டாளாய் இருப்பதா, மொழிகள் கிடைக்கவில்லையா? -முட்டாள் ஒருநாளும் நாவை அடக்க முடியாது. -டிமாரட்டஸ்[1]
  • பேச வேண்டிய காலம் அறியாதவன் பேச வேண்டாத காலமும் அறியான். -பப்ளியஸ் ஸைரஸ்[1]
  • மனிதனுக்கு மட்டுமே பேசும்சக்தி உளது; அதன் முதல் உபயோகமும் இறுதி உபயோகமும் கேள்விகள் கேட்பதே. -அர்னால்ட் பென்னட்[1]
  • இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல். -எமர்ஸன்[1]
  • மொழிகள் இலைகளை ஒக்கும்; தழை நிறைந்த மரத்தில் சத்துள்ள பழங்கள் இரா. -போப்[1]
  • நன் மொழி கூறலும், ஒருவித நற்செயலே ஆயினும் மொழிகள் செயல்கள் ஆகா. -ஷேக்ஸ்பியர்[1]
  • சொற்கள் சுருங்கினால், பயன் வீணாவதில்லை. - ஷேக்ஸ்பியர்[2]
  • மொழிகள் என்பவை அறிவு உபயோகிக்கும் நாணயங்களேயாகும். சர்க்காரிடம் பொருளில்லையெனில் நாணயங்கள் செலாவணியாகா, அதுபோல் பொருளில்லாத மொழிகளும் பயன்படா. -கோல்ட்டன்[1]
  • மொழிகள் சாதனமேயன்றி லட்சியமன்று. கருத்தைக் கூறுவதே நம் நோக்கம். அதற்குரிய ஆயுதமே பாஷை, -ரெய்னால்ட்ஸ்[1]
  • நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமேயாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர். -ஸிஸரோ[1]
  • கருத்து பழையதாயுமிருக்கலாம். பலர் கூறிய தாயுமிருக்கலாம். ஆயினும் அது உயர்ந்த முறையில் அழகாய்க் கூறுபவனுக்கே உரியதாகும் - லவெல்[1]
  • நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே. - ஹீன்[1]
  • சிலேடை உபயோகிப்பவர் இருப்புப் பாதையில் கற்களை வைத்து மகிழும் விஷமச் சிறுவர்களை ஒப்பர். - ஹோம்ஸ்[1]
  • வீண்சொற்கள் விஷயங்களை வியர்ந்த மாக்குகின்றன. -பிஷப் ஆண்ட்ரூஸ்[1]
  • பொருளில்லாத சொற்கள் கருத்தில்லாத செயல்களாகும்; சொற்கள் செயல்களின் சிறகுகள். - லவேட்டர்[2]
  • உன்சொற்கள் எப்படி இருக்கின்றனவோ. அந்த அளவுக்கு உன் அன்பு மதிக்கப்பெறும் உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். -சாக்ரடீஸ்[2]
  • ஆயிரம் சொற்கள் சேர்ந்தாலும், ஒரு செயலைப் போல் மனங்களில் பதிவதில்லை. -இப்ஸன்
  • ஒரு மனிதன் ஒரு செயலைச் செய்ய வேண்டாமென்று நீ கருதினால், அதைப்பற்றி அவனைப் பேசும்படி செய்; ஏனெனில், மனிதர்கள் எவ்வளவு அதிகமாய்ப் பேசுகின்றனரோ, அந்த அளவுக்கு அவர்கள் வேறு எதையும் செய்வதில்லை.[2]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198-199. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சொற்கள்&oldid=21576" இலிருந்து மீள்விக்கப்பட்டது