ஜீன் டி லா புரூயர்

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மெய்யியலாளர், எழுத்தாளர்

ஜீன் டி லா புரூயர் (Jean de La Bruyère) (16 ஆகத்து 1645 - 10 மே 1696) ஒரு பிரஞ்சு கட்டுரையாளர் மற்றும் அறநெறியாளர் ஆவார்.

ஜீன் டி லா புரூயர்

மேற்கோள்கள்

தொகு
  • ஒன்றும் அறியாதவன் தான் கற்றுக்கொண்டதைப் பிறர்க்குக் கற்றுக் கொடுப்பதாய் நம்பிக்கொள்கிறான். அதிகம் அறிந்தவன் தான் கூறுவது பிறர் அறிந்திருக்க முடியாது என்று நினைப்பதில்லை.[1]
  • செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான்.[2]
  • உலோபிகள் உறவினருமாகார், நண்பருமாகார், -மனிதப் பிறவிகளுங்கூட ஆகார்.[2]
  • குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம். [3]
  • நன்றாய்ப் பேசும் ஆற்றல் இன்மையும், நாவை அடக்கும் ஆற்றல் இன்மையும் பெரிய துர் அதிர்ஷ்டங்களாகும்.[4]
  • முட்டாள்களுக்கு அர்த்தமாவதே யில்லை. சாதாரணமான அறிவுடையவர் சந்தேகமற அறிந்து விட்டதாக எண்ணிக்கொள்வர். பேரறிஞர்க்கு விளங்காத பகுதிகள் இருந்தாலும் இருக்கும். சாமர்த்தியம் காட்ட விரும்புவோர் தெளிந்தவற்றைத் தெளிவாயில்லை என்பர், தெளிவாயில்லாதவற்றை அர்த்தமாக்கிக் கொள்ள முயல்வர்.[5]
  • அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர்.[6]
  • அநேகமாகப் பிரமுகர்களைப் புகழ்வது அவர்களுடன் பழக்கம் உண்டு என்று காட்டிக் கொள்வதற்காகவே.[7]
  • தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன.[8]
  • மனிதர் இருதயத்தின் குணாதிசயங்களை எள்ளளவும் மதிப்பதில்லை. அறிவு, உடல்-இரண்டிலொன்றின் ஏற்றத்தையே போற்றுகின்றனர்.[9]

குறிப்புகள்

தொகு
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உலோபம். நூல் 140-141. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23. 
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தனிமை. நூல் 66 - 67. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜீன்_டி_லா_புரூயர்&oldid=17041" இலிருந்து மீள்விக்கப்பட்டது