நாகரிகம்
சிக்கலான மாநில சமூகம்
நாகரிகம் குறித்த மேற்கோள்கள்
- ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்குங்கோல் அதன் ஜனத்தொகையோ நகரங்களின் விசாலமோ செல்வத்தின் மிகுதியோ அன்று. அதில் பிறக்கும் மனிதரின் குணமேயாகும். - எமர்ஸன்[1]
- நாகரிகம் உண்டாக்கத் தக்க நிச்சயமான வழி பெண்களின் செல்வாக்கே. -எமர்ஸன்[1]
- நாகரிகத்தின் உச்சிப் பொழுது வந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் இப்பொழுதுதான் கோழி கூவும் சமயம். -எமர்ஸன்[1]
- நாகரிகம் உடையவர் யார்? தமக்கு உடை செய்யவும் வயிறு நிரப்பவும் உடலை அலங்கரிக்கவும் அடிமைகள் உடையார் நாகரிகம் இல்லாதவர். தம் அத்யாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யமட்டும் சேவகர் வைத்துக் கொண்டு அவர்க்கும் சுகவாழ்வு அளிப்பவரே நாகரிகம் உடையவர். -ரஸ்கின்[1]
- நம்மிடையிலும் இன்னும் நாகரிக தசையடையாத காட்டுமிராண்டிகள் பலர் இருக்கவே செய்கின்றனர். -ஹாவ்லக் எல்லிஸ்[1]
- மனிதர் இருதயத்தின் குணாதிசயங்களை எள்ளளவும் மதிப்பதில்லை. அறிவு, உடல்-இரண்டிலொன்றின் ஏற்றத்தையே போற்றுகின்றனர். -லா புரூயர்[1]
- ஜன சமூகங்கள் வாழலாம், அல்லது வாழாமல் மடியலாம். ஆனால் நாகரிகம் மட்டும் ஒருநாளும் மறைந்து விடாது. -மாஜினி[1]
- ஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும். -விக்டர் ஹூகோ[1]
- காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன். -நீட்சே[1]
- நாகரிகம் என்பது மனித சமூகம் மேல் நோக்கிச் செல்வதற்கான போராட்டமாகும். அதில் பத்து இலட்சக்கணக்கானவர்கள் மிதித்து நசுக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்களை மிதித்துக் கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் மேலே செல்கின்றார்கள்.- பால்ஃபோர்[2]
- சமூகங்கள். தனி நபர்களைப்போல் வாழ்கின்றன அல்லது மடிகின்றன. ஆனால், நாகரிகம் அழிய முடியாது. - மாஜினி[2]
பழமொழிகள்
தொகு- சமூகத்தின் நாகரிகம் சமூகத்தை வைத்தன்றிச் சான்றோரை வைத்தே மதிக்கப்பெறும். சான்றோர் இல்லையெனில் நாகரிகமும் இல்லை. -பழமொழி[1]
குறிப்புகள்
தொகு
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.0 2.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 233. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.