ஜெரிமி டெய்லர்

ஆங்கில குருமார்

ஜெர்மி டெய்லர் (Jeremy Taylor) (1613-1667) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற எழுத்தரும், சமயத் தலைவரும் ஆவார்.

  • ஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும்-அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது. [1]
  • இரகசியம் என்பது நட்புக்குரிய கற்பு.[2]
  • நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார்.[3]
  • நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம்.[3]
  • நாம் கடவுளிடம் எதை வேண்டிக்கொண்டாலும், நாமும் அதற்காக உழைப்போம்.[4]
  • பொறுமையின்மை சிறு குளிரைப் பெரிய ஜூரமாக்கிவிடும் ஜூரத்தைப் பிளேக் ஆக்கிவிடும் அச்சத்தை ஏக்கமாக்கிவிடும். கோபத்தை வெறியாக்கிவிடும் சோகத்தைப் பெருந்துக்கமாக்கிவிடும்.[5]

குறிப்புகள்

தொகு
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 104. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. 3.0 3.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 269-270. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜெரிமி_டெய்லர்&oldid=35404" இலிருந்து மீள்விக்கப்பட்டது