வழிபாடு
மத பக்தி
வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை நோக்கிய, சமய பக்தி செயலாகும். வழிபாட்டு முறையானது, முறைசாரா அல்லது முறையான குழு அல்லது ஒரு நியமிக்கப்பட்ட தலைவரால் எனத் தனித்தனியாக செய்யப்படலாம்.
மேற்கோள்கள்
தொகு- கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும். -பிலிப்ஸ் புரூக்ஸ்[1]
- கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார். -சாக்கிரட்டீசு[1]
- மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒருநாளும் செவிடாய் இருப்பதில்லை. -குவார்ல்ஸ்[1]
- கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமலிருக்க வேண்டும் என்பதே. -ருஷ்யப் பழமொழி[1]
- நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார். -ஜெரிமி டெய்லர்[1]
- நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம். -ஜெரிமி டெலய்ர்[1]
- 'கடவுளே! தைரியம் அருளும்' என்று பிரார்த்தித்தால், துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி. -ஸெஸி[1]
- என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்தனம் அளிக்குமாறு வாழ்ந்துவிட்டேன்.-ஜீன் இன்ஜெலோ[1]
- அறியாமலே எம் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு. - விக்டர் ஹகோ[1]
- ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும். -ஹூக்கர்[1]
- சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர். -லவல்[1]
- கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம். -ஸெனீகா[1]
- பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம். -லெய்ட்டன்[1]
குறிப்புகள்
தொகு