பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது ஒரு வேண்டுகோள் செயலாகும். இது வழிபாட்டு இலக்குடன் தொடர்பு கொண்டு ஒரு பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை செயல்படுத்த முற்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
 • சில சிந்தனைகளே பிரார்த்தனைகளாகிவிடும். உடல் எந்த நிலையில் இருந்தாலும் ஆன்மா முழங்கால் பணிந்து வணங்கும் நேரமும் உண்டு. - விக்டர் ஹியூகோ[1]
 • பிரார்த்தனை என்பது சொற்களை அடுக்குவது அன்று. மனப்பூர்வமானது ஆதரவற்ற நிலையை விளக்குவது அன்று. அதை உணர்வது பேச்சுத்திறன் அன்று. ஆனால், ஆன்மாவின் அந்தரங்க விசுவாசமாகும். - எச் மோ[1]
 • பிரார்த்தனை என்பதைச் சுருக்கமாக விளக்கினால், அது நமது விருப்பத்தைக் கடவுள் பக்கமாகத் திருப்புவதாகும். பி புருக்ஸ்[1]
 • நம்முடைய பிரார்த்தனைகள் பொதுவான ஆசிகளை வேண்டியிருக்க வேண்டும். ஏனெனில், நமக்கு எவை நன்மையானவை என்பதைக் கடவுளே அறிவார். சாக்ரடீஸ்[1]
 • நாம் கடவுளிடம் எதை வேண்டிக்கொண்டாலும், நாமும் அதற்காக உழைப்போம். - ஜெரிமி டெய்லர்[1]
 • கடவுள் நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறார். ஆனால் பிரார்த்தனை. அவரை நம்முடைய பூமிக்குக் கொண்டுவந்து நம் முயற்சிகளோடு இணைத்துவிடுகின்றது. - திருமதி டி. காஸ்பரின்[1]
 • சொற்கள் குறைந்துள்ள பிரார்த்தனை மேலானது. - லூதர்[1]
 • காலையில் கடவுளைவிட்டு ஓடியவன் அன்று முழுவதும் அவரைக் கண்டுபிடிக்கமாட்டான். - பனியன்[1]
 • நம் பிரார்த்தனைகள் காலையும் மாலையும் மேலே எழவேண்டும். நமது நாள்கள் கடவுளில் ஆரம்பித்துக் கடவுளிலே முடியவேண்டும். - சானிங்[1]
 • பொறுமைதான் மிக உயர்ந்த பிரார்த்தனை. - புத்தர்[1]
 • ஆன்மா பிரார்த்தனை என்ற சிறகைக் கொண்டு வானுலகுக்குப் பறந்து செல்கின்றது. தியானந்தான் நாம் கடவுளைக் காணும் கண். - அம்ப்ரோஸ்[1]
 • பிரார்த்தனையில் சொற்களில்லாத இதயம். இதயமில்லாத சொற்களைவிட மேலானது. பனியன்[1]
 • உங்களுடைய வேலைகளைத் தொடங்கு முன்னால் அவைகளை வெற்றிகரமாக முடிப்பதற்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். - ஸெனஃபோன்[1]

குறிப்புகள்

தொகு
 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 269-270. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரார்த்தனை&oldid=34464" இலிருந்து மீள்விக்கப்பட்டது