ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (பெப்ரவரி 27, 1807 – மார்ச் 24, 1882 Henry Wadsworth Longfellow) என்பவர் ஒரு உலகப்புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ

மேற்கோள்கள்

தொகு
  • பெரிய ஆசைகளின் தொந்தரவு இல்லாவிட்டால் பெரும் பாலான மக்கள் சிறு விஷயங்களிலும் வெற்றி பெறுவார்கள்.[1]
  • கர்வமானது குதிரையின் மேல் கம்பீரமாகச் சவாரி செய்துகொண்டு போகும். ஆனால் கால் நடையாகத்தான் திரும்பி வரும். வழி நெடுகப் பிச்சை எடுக்கவும் செய்யும்.[2]
  • அறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே.[3]
  • இயற்கையின் விதிகள் நீதியானவை; ஆனால், பயங்கரமானவை.[4]
  • வாழ்க்கையின் வெயிலில் கொஞ்சம் காய்ந்தும். மழையில் கொஞ்சம் நனைந்தும் வந்ததால், எனக்கு நன்மையே ஏற்பட்டிருக்கின்றது.[5]
  • குணத்திலும். பாவனைகளிலும், நடையிலும் எல்லா விஷயங்களிலும் மிக உயர்ந்து நேர்த்தியாக விளங்குவது எளிமைதான்.[6]
  • கட்டைகளைப் புரட்டிப் போட்டால் நெருப்பு நன்றாக எரிவது போல. படிக்கும் விஷயங்களையும் சிறிது மாற்றிக் கொண்டால், அயர்ந்துள்ள மூளை கிளர்ச்சி பெறும்.[7]
  • பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.
    சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது.[8]
  • மகிழ்ச்சி, மிதமான உணவு, போதிய ஒய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா. [9]

குறிப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102-103. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 115. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 88-90. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.