கருத்துடன் கற்றல்
கருத்துடன் கற்றல் குறித்த மேற்கோள்கள்
- ஏதாவது ஓர் அறிவுத் துறையில் விசேடத் திறயை பெறுவதற்காக நீ எந்தக் கஷ்டமான உழைப்பையும் மேற்கொள்ள வேண்டும். ஆயினும், முற்றிலும் ஒரே துறையில் மட்டுமன்றி. எல்லாத் துறைகளையும்பற்றி ஓரளவு உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். - ஸெனீகா[1]
- எந்த ஆராய்ச்சியிலும் நாம் சிறிது ஊன்றிக் கருத்தைச் செலுத்தினால், அது நமக்கு இன்பமளிக்காமல் இராது. - போப்[1]
- திட்டமில்லாமல் கண்டபடி கற்பது, பென்சிலால் எழுதிய எழுத்துகளைப் போல் விரைவில் அழிக்கப்படலாம்: விவரமாகப் பிரித்து முறையாகக் கற்பது, மையால் எழுதியதைப் போல நிலைத்து நிறகும். - கூப்பர்[1]
- கட்டைகளைப் புரட்டிப் போட்டால் நெருப்பு நன்றாக எரிவது போல. படிக்கும் விஷயங்களையும் சிறிது மாற்றிக் கொண்டால், அயர்ந்துள்ள மூளை கிளர்ச்சி பெறும். - லாங்ஃபெல்லோ[1]
- ஒரு பையன் தனியாக ஐந்து ஆண்டுகள் படிப்பதைவிட பொதுப் பள்ளியில் ஓர் ஆண்டிலேயே அதிகமாக அறிவைப் பெற்றுவிடுவான். இளைஞர். உலகியல் அறிவை ஆசிரியர்களிடமிருந்து பெறுவதைக்காட்டிலும் தமக்குச் சமமாயுள்ள இளைஞர்களிடமிருந்து அதிகமாய்க் கற்கின்றனர். - கோல்டுஸ்மித்[1]