ராபர்ட் சதே

பிரித்தானிய கவிஞர்
(ஸதே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராபர்ட் சதே (Robert Southey (12 ஆகத்து 1774 – 21 மார்ச் 1843) என்பவர் ஒரு ஆங்கில அகத்துறைக் கவிஞர்.

ராபர்ட் சதே

மேற்கோள்கள்

தொகு
  • ஆன்மாவைப் பற்றிய முக்கிய பிரச்சினை அது எங்கிருந்து வந்தது என்பதன்று; அது எங்கே போகிறது என்பதாகும். அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை.[1]
  • நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.[2]
  • சிக்கனமாயிருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போலாகும். சாம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப்போல அவ்வளவு கடினமான காரியமன்று.[3]
  • சுதந்திரமாயிருக்க வேண்டுமென்று உறுதிகொண்ட மக்கள்மீது அடிமைத்தனத்தைச் சுமத்தப் பார்ப்பதைவிட மலையை அடியோடு பெயர்த்தெறிவது எளிது. [4]
  • சூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும்.[5]
  • ஒரு நண்பனை இழத்தல் ஓர் அங்கத்தை இழப்பது போன்றது. காலம் புண்ணின் வேதனையைக் குணப்படுத்திவிடும். ஆனால், அந்த நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது.[6]
  • ஒரு குழந்தை தான் படிப்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கும். அறிவாளர்கள் எவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள்.[7]
  • அதிகாலையில் வீசும் மென்காற்றை அனுபவித்தவர்களுக்கு. ஒரு நாளில் மிக இனிய நேரம் அதுவே என்பதும், உற்சாகமாக வேலை செய்யக்கூடிய நேரம் என்பதும் தெரியும். ஆனால், பொதுவாக அந்த நேரத்தைப் படுக்கையிலே கிடந்து வீணாக்குகிறோம்; இயற்கையின் நோக்கம் நாம் அந்த நேரத்தில் மிகுந்த பயனடைய வேண்டும் என்பது.[8]

குறிப்புகள்

தொகு
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம். நூல் 113- 114. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 251-252. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 319-320. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ராபர்ட்_சதே&oldid=36323" இலிருந்து மீள்விக்கப்பட்டது