விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள் தொகுப்புகள்

மார்ச்

தொகு

மார்ச் 13-15, 2014

தொகு
  • மார்ச் 13, 2014
 



தனி நபர்களைக் கொல்வது எளிது, ஆனால் உங்களால் கருத்துகளைக் கொல்ல முடியாது.

~ பகத் சிங் ~

 
  • மார்ச் 14, 2014
 



நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம்.

~ வோல்ட்டேர் ~

 
  • மார்ச் 15, 2014
 



தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது.

~ மகாத்மா காந்தி ~

 

மார்ச் 16-22, 2014

தொகு
  • மார்ச் 16, 2014
 



தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!

~ ஆபிரகாம் லிங்கன் ~

 
  • மார்ச் 17, 2014
 



இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!

~ பிடல் காஸ்ட்ரோ ~

 
  • மார்ச் 18, 2014
 



பரிசோதனைகளின் முடிவுகள் ஒரு கோட்பாட்டுக்கு எத்தனை முறை ஒத்துப் போனாலும் சரி, அடுத்த முறை அம்முடிவு அக்கோட்பாட்டுடன் முரண்படாது என்பதற்கு உறுதியேதுமில்லை.

~ ஸ்டீபன் ஹாக்கிங் ~

 
  • மார்ச் 19, 2014
 



நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந் தொலைவுகளைக் காண இயன்றது.

~ ஐசக் நியூட்டன் ~

 
  • மார்ச் 20, 2014
படிமம்:Oscar Puyal Rahman.jpg



என்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அன்பு மற்றும் வெறுப்பு இவற்றில் ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். இதோ இங்கிருக்கிறேன்.

~ ஏ. ஆர். ரகுமான் ~

 
  • மார்ச் 21, 2014
 



எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள் பிடிக்கும். நான் அதை தான் எப்பொழுதும் செய்கிறேன்.

~ சார்லஸ் டார்வின் ~

 
  • மார்ச் 22, 2014
 



கல்வியே உலகை மாற்றக்கூடிய சக்தி மிக்க ஆயுதம்.

~ நெல்சன் மண்டேலா ~

 


மார்ச் 23-29, 2014

தொகு
  • மார்ச் 23, 2014
 



விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.

~ சுவாமி விவேகானந்தர் ~

 
  • மார்ச் 24, 2014
 



யாரை நேசிக்கிறாய் கவலையில்லை ; எங்கே நேசிக்கிறாய் தேவையில்லை, எதை நேசிக்கிறாய் கேள்வியில்லை, எப்படி நேசிக்கிறாய் பொருட்டில்லை,ஏன் நேசிக்கிறாய் அவசியமில்லை, நேசிக்கிறாயா அது போதும்.

~ ஜான் லெனன் ~

 
  • மார்ச் 25, 2014
படிமம்:Mao.jpg



போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்.

~ மா சே துங் ~

 
  • மார்ச் 26, 2014
 



பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.

~ அம்பேத்கர் ~

 
  • மார்ச் 27, 2014
 



உலகின் புரிந்து கொள்ள முடியாத உண்மைக்கு எதிராக மனிதன் செய்ய முயலும் முயற்சிகள் அனைத்தும் ஒரு கதைதான்.

~ ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ் ~

 
  • மார்ச் 28, 2014
 



இயற்கை வளம் என்பது வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது தான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது.

~ தியோடர் பாஸ்கரன் ~

 
  • மார்ச் 29, 2014
 



எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.

~ சே குவேரா ~

 

மார்ச் 30- ஏப்ரல் 5, 2014

தொகு
  • மார்ச் 30, 2014
 



சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை எடுக்கப்படுகிறது.

~ சுபாஷ் சந்திர போஸ் ~

 
  • மார்ச் 31, 2014
 



உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.

~ மசானபு புகோகா ~