பித்தாகரசு
(பிதாகோரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பித்தாகரசு ஒரு அயோனியக் கிரேக்கக் கணிதவியலாளரும், பித்தாகரியனியம் என்னும் மத இயக்கம் ஒன்றின் நிறுவனரும் ஆவார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும், அறிவியலாளராகவும் போற்றப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.[1]
- நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கு அசையாமல், உறுதியாய் நிற்கும் என்பது இறைவனின் சட்டம்.[2]
- மனிதன் வாழ்வாகிய இந்த மேடையில் கடவுளும் தேவர்களுமே (வேலையில்லாமல்) பார்வையாளர்களாக இருக்க உரிமையுள்ளவர்கள்.[3]
- திறமையும் அவசியமும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் வாழ்கின்றன. [4]
- எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னை நீயே மதித்துக்கொள்.[5]
- நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. உன்னைப்பற்றிப் பேசுவதை மற்றவர்களுக்கு விட்டுவிடு. [6]
- வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.[7]
குறிப்புகள்
தொகு
- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142-143. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 149. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 208. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191-192. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.