கடினம் என்பது குறித்த மேற்கோள்கள்.

  • உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டங்கள் மனத்தை வலிமையாக்கும். . ஸெனீகா[1]
  • நம்முடைய ஆற்றல் அதற்கு எதிராகத் தோன்றும் தடைகளின் அளவைப் பொறுத்தது. - ஹாஸ்லிட்[1]
  • நாம் எதிர்பாராத இடங்களில் தோன்றும் கஷ்டங்களே மிகப் பெரியவை. - கதே[1]
  • கடினம், கஷ்டம் என்பது என்ன? குறித்த காரியங்களை முடிக்க எவ்வளவு வலிமை வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லே அது. அதைக் கண்டு குழந்தைகளும் மூடர்களுமே அஞ்சுவர் மனிதர்களுக்கு அது ஊக்கமே அளிக்கும். . ஸாமுவேல் வரேன்[1]
  • திறமையும் அவசியமும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் வாழ்கின்றன. - பிதாகோரஸ்[2]
  • நம்மை மனிதர்களாக்குவது உதவிகளல்ல. தடைகள்: வசதிகளல்ல. கஷ்டங்கள் - மாத்தியூஸ்[2]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. 2.0 2.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 149. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கடினம்&oldid=20782" இலிருந்து மீள்விக்கப்பட்டது