ஊதாரித்தனம்
ஊதாரித்தனம் என்பது பணத்தை அதிகப்படியாக அல்லது மிதமிஞ்சி செலவு செய்தல் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ஊதாரித்தனத்தைச் சட்டங்களால் தடுக்க முடியாது. இது எப்பொழுதும் பொதுமக்களுக்குத் தீமையாயிருப்பதுமில்லை. மூடன் ஒருவன் ஒரு ரூபாயை வீணாகச் செலவழித்தால், அலனைவிடக் கெட்டிக்காரன் ஒருவன் அதைப் பொறுக்கிக் கொள்கிறான். அந்த ரூபாயை என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்கு அதிகமாய்த் தெரியும். ஆதலால், பணம் தொலைவதில்லை. - ஃபிராங்க்லின்[1]
- வீட்டைக் கட்டிவிட்டு. அதற்காகக் கொடுக்க வேண்டிய பணமில்லாதவன். தான் விட்டு ஓடுவதற்காகவே அந்த வீட்டை அமைத்தவனாகிறான். -யங்[1]
- ஊதாரியாயிருப்பவன் விரைவிலே ஏழையாவான் வறுமையால் அவன் பிறரை அண்டி வாழ நேரும், அவனிடம் ஊழல்களும் மலிந்துவிடும். - ஜான்ஸன்[1]
- செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிகச் செலவும். ஊதாரித்தனமுமாகும். - தியோஃப்ரேஸ்டஸ்[1]
மேலும் காண்க
தொகு
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132-133. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.