ராபர்ட் பர்ன்ஸ்
ராபர்ட் பர்ன்ஸ் (ஜனவரி 25, 1759 முதல் சூலை 21, 1796 வரை) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார். இவர் ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞராகக் கருதப்படுகிறார். இவர் ஸ்காட் மற்றும் ஆங்கில மொழியில் கவிதைகளைப் படைத்துள்ளார்.[1]
- 'தவறு தெரிந்து செய்தாலும், உனது உடன் பிறப்பு என்பதற்காக விட்டுவிடாதே, ஆராய்வாயாக! அதைவிட, உனது உடன் பிறந்தான் உன்னிடம் உன்னதமான பாசத்தோடும், உயர்வான பண்போடும் நடந்தாலும் கூட. தவறு செய்தான் எனப்படும்போதும் ஆராய்வாயாக! ஏன் தெரியுமா? நெறி பிறழ்வது மனித இயல்பு தானே என்று சிந்தனை செய்![2]
- மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமையால் எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்கள் துக்கப்படுகிறார்கள்.[3]
- துன்புறுவோர் அனைவரும் சகோதரர். துன்பம் துடைப்போனும் சகோதரனே. அவன் ஒருவன் கிடைத்து விட்டால் அந்த இன்பத்துக்கு இணையேது? [4]
- தங்கத்தால் வாங்க முடியாததைத் தருகிறேன். அதுதான் உண்மை கூறும் கவிஞனுடைய புகழுரை.[5]
குறிப்புகள்
தொகு
- ↑ Thomas Hamilton, architect - Joe Rock's Research Pages.
- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 167. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.