மாரிஸ் மாட்டர்லிங்க்

பெல்ஜிய நாடக எழுத்தாளர், கவிஞர்

மாரிஸ் மாட்டர்லிங்க் (1862 - 1949) (Maurice Maeterlinck) என்பவர் ஒரு நாடக ஆசிரியர் ஆவார். இவர் ஐரோப்பிய கண்டத்துள்ளே உள்ள பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர். இவர் நாடகக் கலை திறமைக்காக நோபல் பரிசு பெற்றவர்.

  • ஒருவன் அன்பு செய்தும் கூட அவனால் அந்த அன்பை பெறமுடியாமல் இருப்பது துக்ககரமான ஒரு செயல்! ஆனால், ஒருவனால் அன்பு செய்ய இயலாதிருப்பது அதனினும் அதிகத் துக்கமானதாகும்.[1]
  • அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர்.[2]
  • ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. [2]

குறிப்புகள்

தொகு
  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  2. 2.0 2.1 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=மாரிஸ்_மாட்டர்லிங்க்&oldid=37948" இலிருந்து மீள்விக்கப்பட்டது