மனிதர்
இருகால் பாலூட்டி
(மனிதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மனிதர் என்பது இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும்.மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்,ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளையிருப்பதால் இது,பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning),மொழி, உண்முக ஆய்வு,பிரச்சனைகளைத் தீர்த்தல்,உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமையைத் தருகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். - இங்கர்சால்
- உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். - சாக்ரடிஸ்
- பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல! -அம்பேத்கர்
- ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்
- ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்!
- படைப்பில் மனிதனே முதன்மையான அதிசயம்; அவனுடைய இயல்பைப்பற்றி ஆராய்தல் உலகில் உன்னத ஆராய்ச்சியாகும். - கிளாட்ஸ்டன்[1]
- சமூகத்தால் சீர்திருத்தப்பட்ட மனிதன் எல்லா விலங்குகளிலும் சிறந்தவன். அவன் சட்டமும் நீதியும் இல்லாமல் வாழ்ந்தால், அவனைப்போல் பயங்கரமானது வேறெதுவும் கிடையாது. - அரிஸ்டாட்டில்[1]
- உன்னதமான மனிதனுடைய வாழ்க்கைமுறை மூன்று பிரிவாயிருக்கும்; அவன் ஒழுக்கத்தோடு இருப்பதால். கவலையற்றிருப்பான்; அவன் அறிவாளியாயிருப்பதால், அவனுக்குக் குழப்பங்கள் இருக்கமாட்டா அவன் தைரியமாயிருப்பதால், அச்சம் அண்டாது. - கன்ஃபூஷியஸ்[1]
- ஒருவன் எப்பொழுதும் வீரனாயிருக்க முடியாது. ஆனால், ஒருவன் எப்பொழுதும் மனிதனாய் இருக்க முடியும். - கதே [1]
- நான் என்னை ஒரு மனிதனாக்கிக்கொள்ளத் தீர்மானிக்கிறேன். நான் அதில் வெற்றி பெற்றால், மற்ற எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுவிடுவேன். - கார்ஃபீல்டு [1]
- நம்பிக்கை இழந்து, கௌரவமும் போய்விட்டால், மனிதன் பிணந்தான். _ விட்டியர்[1]
- சமயம் அரசியல் கல்வி முறை ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு சோதனை உண்டு. அது எத்தகைய மனிதனை உருவாக்குகிறது? -ஏமியல்[1]
- ஒரே மனிதனைக் கடவுள் மனிதர்களாகப் பிரித்துள்ளார். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பது அவர் நோக்கம். - ஸெனீகா[1]
- ஒருவன் எப்பொழுதும் வீரனாயிருக்க முடியாது. ஆனால், ஒருவன் எப்பொழுதும் மனிதனாய் இருக்க முடியும். - கதே[1]
- மனிதன் தானாக நிமிர்ந்து நிற்கவேண்டும். மற்றவர்கள் அவனை அப்படி நிறுத்தி வைக்கக்கூடாது. - மார்க்க அரேலியஸ்[1]
- நன்றி விசுவாசம் உடையவன் எவனோ அவன் மாத்திரம் மனிதன் ஆவான்.[2]
- மனிதன் வேட்டி, வீடு இவைகள் கொஞ்சம் பழசானாலும் மாற்றிக் கொள்கிறான். ஆனால் பழமைப் பித்தை மட்டும் பிடிவாதமாக மாற்றிக் கொள்ள மறுக்கிறார்.[2]
- மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான்.[2]
- மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன.[2]
- அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை(கடவுள்) பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.[2]
- சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.[2]
- மனிதனுடைய நலம் என்பவற்றுள் எல்லாம் தலை சிறந்த நலம் அவன் மனத் திருப்தியே ஆகும்.[2]
- மனிதன் கடவுள், உணர்ச்சி மாற மாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது.[2]
- ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.[3]
- மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல. மாறாக, அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வை நிர்ணயிக்கிறது.
சான்றுகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 302. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
- ↑ Karl Marx, F.Engels, Collected works, volume 1, page 8
- ↑ "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு