மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  • உன் மனதில் எதை பதிய வைக்கிறாயோ அப்படியே உன் உடல் செயல்படும் பிரபஞ்சம் அப்படியே இயங்கும்.
  • மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும். - ஔவையார்
  • மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும். - நெப்போலியன் ஹில்
  • அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை. - ரிச்சர்ட் டாக்கின்சு
  • மௌனமாகத் தீர்மானித்தால் மனம் கலங்காத நிலைபெறும். - மகாவீரர்
  • மனம் தளரக் கூடாது, துணிச்சல் தான் உள்ள ஊக்கம். - திருபாய் அம்பானி
  • இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே. - காரல் மார்க்சு
  • கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்.
  • தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்.
  • யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது

பழமொழிகள்

தொகு

தமிழ்ப் பழமொழிகள்

தொகு
  • கள்ள மனம் துள்ளும்.
  • செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
  • பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
  • மனம் உண்டானால் இடம் உண்டு.
  • மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.
  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • மனம் போல வாழ்வு.

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் மனம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மனம்&oldid=17823" இலிருந்து மீள்விக்கப்பட்டது