டி. கே. சிதம்பரநாத முதலியார்

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்

டி. கே. சிதம்பரநாத முதலியார் (T. K. Chidambaranatha Mudaliar, செப்டம்பர் 11, 1882 - பெப்ரவரி 16, 1954) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  • நான் தெலுங்கு நாட்டு சங்கீதத்தையும், கன்னட தேசத்து சங்கீதத்தையும் ஆராய்ந்திருக்கிறேன். அவை எல்லாம் தமிழ் இசையுடன் கொஞ்சங்கட சம்பந்தப்பட வில்லை. அவை மராட்டி, ஹிந்துஸ்தானி இசையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். தாம்பிர பரணி நதி ஜலத்தைக் குடித்து, தமிழ்க் காற்றையே சுவாசித்து வந்த தியாகராஜ சுவாமிகள் தம் தாய் பாஷையில் சாகித்திய மேற்பட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்தும், தமிழிலுள்ள சாகித்யங்களின் மேன்மையை உணர்ந்தும், தம் சாகித்தியங்களைத் தாய் மொழியிலேயே செய்தார். —ரசிகமணி-டி. கே. சிதம்பரந்த முதலியார் (25-10-1941) (தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)[1]
  • நான் முதன் முதலில் சென்னைக்குச் சென்ற பொழுது அங்குள்ளவர்கள் இசை உணர்ச்சி இல்லாதவர்கள் என்று தெளிவாகி விட்டது. தமிழ் நாட்டில்தான் மேளம், இசை அல்லது பரதநாட்டியம் இருக்கின்றன. பிற பாஷைகளில் கிடையாதெனச் சிலர் நினைக்கலாம். தமிழ் நாகரிகம் உலகம் முழுமையும் பரவி இருந்ததற்கும் போதிய சான்றுகள் பலவுள. பண்பாடு என்பது தமிழில்தான் உண்டு. அதன் கவிதை உயர் நோக்கங்கள் இவைகள் தெலுங்கு பாஷையில் கிடையாது.— (25-10-1911, தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)[2]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
  • கம்பன் அரங்கைக் கட்டிய வி.ஜி.பி. நிறுவனம், கம்பன் புகழ் பாடியே வாழ்ந்த ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாருக்கு இந்த அரங்கில் சிலை வைக்க வேண்டும். —கவிஞர் மீ. ப. சோமசுந்தரம் (1-1-1977) (வி.ஜி.பி. நிறுவனத்தாரின் கோல்டன் பீச்சில், கம்பன் அரங்கத் திறப்பு விழாவில்)[3]

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: