ஊராட்சி
ஜவகர்லால் நேரு பஞ்சாயத்து பற்றிக் கூறியவை
தொகு"ஸ்தல சுயாட்சி அல்லது பஞ்சாயத்துதான் அரசாங்கக் கட்டுக்கோப்பின் அஸ்திவாரம். இந்த அஸ்திவாரம் உறுதியாக இல்லாவிடில் மேல் கட்டுமானம் பலவீனமாகிவிடும்...சோஷலிஸக் கூட்டுறவுச் சமுதாய அமைப்பிலே நாம் மேலிருந்து எதையும் திணிக்க முடியாது. வேரிலிருந்து, கிராமத்திலிருந்து, கிராமப் பஞ்சாயத்திலிருந்துதான் அது ஆரம்பமாக வேண்டும்..." - 1958[1]
“..... நம் கிராம மக்களுடைய வாழ்க்கைத் தரம் நன்றாக வளர்வதற்காக அமைக்கப்பட்ட ஸ்தாபனம் பஞ்சாயத்து. அதனுடைய முன்னேற்றம் தான் நம்முடைய முன்னேற்றம் என்று கருத வேண்டும். அந்த மனப்பான்மைதான் நமக்கு ஏற்பட வேண்டும். மேற்பார்வை செய்யும் அதிகாரம், ஜனநாயகத்தில் இருந்துதான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை. உதாரணமாக ஒரு கோர்ட் இருக்கிறது என்று சொன்னால், முன்சீப் கோர்ட், அதற்குமேல் ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று மேலே இருக்கிறது அல்லவா? அது மாதிரித்தான் மேல் அதிகாரியும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அதனால் மேற்பார்வை அதிகாரிகள் சரியாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் மனிதர்கள்தானே. அவர்களும் தப்புகள் செய்யலாம். இருந்தாலும் ஜனநாயகத்தில் தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்கள் கடமை......” - 1962[2]
சித்தரஞ்சன் தாஸ் பஞ்சாயத்து பற்றிக் கூறியவை
தொகு“என்னைப் பொறுத்தவரை, கிராம வாழ்க்கை அமைப்பும் சிறிய ஸ்தல ஸ்தாபனங்களின் நடைமுறைச் சுயாட்சியும்தான் மாகாண சுயாட்சி அல்லது மத்திய அரசாங்கப் பொறுப்பை விடவும் முக்கியமானவை. இந்த இரண்டினுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்றால், ஸ்தல ஸ்தாபனங்களின் சுயாட்சியையே நான் தயக்கமின்றித் தேர்ந்தெடுப்பேன்......” - 1922[3]
அன்னி பெசண்ட் பஞ்சாயத்து பற்றிக் கூறியவை
தொகு“......ஆரோக்கியமான, ரசமான கிராம வாழ்க்கை முறையை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார, தார்மீகச் சீரழிவைத் தடுக்க முடியும். அரசாட்சியின் ஆதார உறுப்பாகப் பஞ்சாயத்தை மீண்டும் ஏற்படுத்தினால்தான் இது சாத்தியமாகும்...... கிராமத்தின் தேவைகளை இதன் வாயிலாக வெளியிட முடியும் ; அவசியமானால் மேல் அதிகார ஸ்தாபனத்தினிடம் அவற்றைப்பஞ்சாயத்து எடுத்துக் கூற முடியும், இன்று ஊமையாகவும் பிறரால் அடக்கி ஒட்டப்படும் விலங்காகவும் இருக்கும் கிராமத்தின் வாய்க்கட்டைப் பஞ்சாயத்து அவிழ்த்து விடும்......” - 1917[4]
சான்றுகள்
தொகு- ↑ முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை (முதற் பதிப்பு: ஜனவரி, 1967 ed.). சென்னை: ஸ்டார் பிரசுரம்.
- ↑ முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை. சென்னை: ஸ்டார் பிரசுரம்.
- ↑ முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை. சென்னை: ஸ்டார் பிரசுரம்.
- ↑ முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை. சென்னை: ஸ்டார் பிரசுரம்.