ஆர். எல். இசுட்டீவன்சன்

ஆர். எல். இசுட்டீவன்சன் (ஆர். எல். ஸ்டீவன்சன்) என்றழைக்கப்படும் இராபர்ட் லூயிசு இசுட்டீவன்சன் (Robert Louis Stevenson, நவம்பர் 13, 1850 – திசம்பர் 3, 1894) இசுக்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர். சாகசப்புனைவு, பயண இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு பாணிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவரது மேற்கோள்கள் தொகு

கடவுள் தொகு

  • குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம். [1]

கடமை தொகு

  • சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன.[2]

சிரிப்பு தொகு

  • மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும். [3]

செல்வம் தொகு

  • ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம்? அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும்?-[4]
  • செல்வனாயிருக்க முதலாவதாக வேண்டியது நிறைந்த உள்ளம்; இரண்டாவதாகவே பொருள்.[4]
  • எதை உடையவன் என்பதன்று, எத்தகையவன் என்பதே வாழ்வின் பிரதான பிரச்னை.[4]

குறிப்புகள் தொகு

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. 4.0 4.1 4.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆர்._எல்._இசுட்டீவன்சன்&oldid=19104" இலிருந்து மீள்விக்கப்பட்டது