சிட்னி ஸ்மித்
(ஸிட்னி ஸ்மித் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிட்னி ஸ்மித் (Sydney Smith) (3 சூன் 1771 - 22 பெப்ரவரி 1845) ஒரு ஆங்கில, எழுத்தாளர் மற்றும் ஆங்கிலிகன் மதகுரு ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- எத்தகைய அறிவுத் திறன்களையும் நாம் பழிக்கக்கூடாது. அவை தனித்தனிப் பயன்களையும் கடமைகளையும் பெற்றிருக்கின்றன; மனிதனின் இன்பத்தையே அவை அனைத்தும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அவை நம்மை முன்னேறச் செய்கின்றன. உயர்த்துகின்றன. வாழ்க்கைக்கு இன்பமளிக்கின்றன.[1]
- மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது.[2]
- சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை.[2]
- ஒரு மனிதன் மாற்றவே முடியாத சட்டம் என்று ஒன்றைப்பற்றிப் பேசினால், அவனை மாற்றவே முடியாத மனிதன் என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.[3]
- சோம்பல் தீய ஒழுக்கத்தையோ, கெடுதலையோ உண்டர்க்கா விட்டால், பொதுவாக அது துக்கத்தை உண்டாக்கும்.[4]
- வாழ்க்கை பல நட்புறவுகளாகிய கோட்டைகளால் பாதுகாப்புப் பெற வேண்டும். அன்பு கொள்வதும், அன்பு பெறுவதும் வாழ்க்கையில் முதன்மையான இன்பங்கள்.[5]
- படிப்போருடைய காலத்தை வீணாக்காமல் அதிகமான அறிவைக் கொடுக்கும் நூலை இயற்றும் ஆசிரியனே அதிகப் பயன் தருபவன் ஆவான்.[6]
- ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா.[7]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 67-68. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 2.0 2.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 202. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 251-252. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.