வெற்றியாளர்
தளரா மனம் கொண்டு வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளர்கள்.
மேற்கோள்கள்
தொகு- சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
- நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.
- வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். - நெப்போலியன் ஹில்.
- அன்றாட வாழ்வின் சாதாரன விசயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
- ஜோர்ஜ் வொசிங்டன்.
- வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய். - வில் ரொகெர்சு.
- பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். - ஜோர்ஜ் பெர்னாட் ஷா.
- வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்
- தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்