ஒன்றுமே அறியாதவனாகத்தான் நான் பிறந்தேன். என்னை மாற்றிக்கொள்ள கொஞ்ச காலம்தான் கிடைத்திருக்கிறது.
நீங்கள் எப்படிப்பட்ட மேதாவி என்பதோ உங்கள் தேற்றம் எவ்வளவு அழகானது என்பதோ கொஞ்சம்கூட முக்கியமில்லை. சோதனை முடிவுகளுடன் பொருந்திப் போகாவிட்டால் உங்கள் தேற்றம் தவறானது, இதுதான் முக்கியம்.
நான் செய்பவற்றை ஒரு சாதாரண மனிதனுக்கு புரியும்படி என்னால் சொல்ல முடியும் என்றால், நான் நோபல் பரிசுக்கு தகுதியானவன்.
என் முதல் விதி இதுதான்: நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக் கொள்ளக்கூடாது, ஆனால் நீங்கள்தான் மிக எளிதில் முட்டாளாக்கப்படக்கூடியவர்.
நாம் மனித இனத்தின் ஆரம்ப கால கட்டத்தில் இருக்கிறோம். நாம் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்துவிடக் கூடாது. மாறாக நம்மால் எவற்றை செய்ய முடியுமோ, எவ்வளவு கற்க முடியுமோ, எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவையும் செய்து வரும் சந்ததிகளுக்கு அவற்றை அளிக்க வேண்டும்.
"நடக்கவே இயலாது" எனும் பதத்தை பெரும் எச்சரிக்கை உணர்வோடு பயன்படுத்த நான் கற்றிருக்கிறேன்.
மனிதன் மற்ற அனைத்து பற்றுகளிலும் இருந்து வித்தலை பெற்றிடலாம். ஆனால், புவியீர்ப்பு மனிதனை புவியோடு பிணைத்திருக்கும்.
ஆராய்ச்சி என்பது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியாதபோது நான் செய்துகொண்டிருப்பது.
மற்ற கோள்களுக்கு செல்லும் விண்வெளி பயணத்தை பற்றி நான் உறுதியாக ஒன்று கூற முடியும். "உங்கள் வரித் தொகை உயரும்".
பெரும்பாலான லுத்தரன் பையன்களைப் போல நான் கைக்கடிகாரமும், பேண்டும் முதல் பரிசாக பெறவில்லை. நான் பெற்றது ஒரு தொலைநோக்கி. எனது தாயார் எனக்கு அதுதான் பொருத்தமான பரிசாக இருக்கும் என்று நினைத்தார்.