ரிச்சர்டு பெயின்மான்
ரிச்சர்டு ஃபெயின்மான் (மே 11,1918 - பிப்ரவரி 15 1988) என்பவர் ஓர் அமெரிக்க இயற்பியல் வல்லுநர்.
மேற்கோள்கள்
தொகு- அறிவியலல்லாத செயல்களில் மூக்கை நுழைக்கும் அறிவியலாலனும் முட்டாளே.
- ஒன்றுமே அறியாதவனாகத்தான் நான் பிறந்தேன். என்னை மாற்றிக்கொள்ள கொஞ்ச காலம்தான் கிடைத்திருக்கிறது.
- நீங்கள் எப்படிப்பட்ட மேதாவி என்பதோ உங்கள் தேற்றம் எவ்வளவு அழகானது என்பதோ கொஞ்சம்கூட முக்கியமில்லை. சோதனை முடிவுகளுடன் பொருந்திப் போகாவிட்டால் உங்கள் தேற்றம் தவறானது, இதுதான் முக்கியம்.
- நான் செய்பவற்றை ஒரு சாதாரண மனிதனுக்கு புரியும்படி என்னால் சொல்ல முடியும் என்றால், நான் நோபல் பரிசுக்கு தகுதியானவன்.
- என் முதல் விதி இதுதான்: நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக் கொள்ளக்கூடாது, ஆனால் நீங்கள்தான் மிக எளிதில் முட்டாளாக்கப்படக்கூடியவர்.
- நாம் மனித இனத்தின் ஆரம்ப கால கட்டத்தில் இருக்கிறோம். நாம் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்துவிடக் கூடாது. மாறாக நம்மால் எவற்றை செய்ய முடியுமோ, எவ்வளவு கற்க முடியுமோ, எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவையும் செய்து வரும் சந்ததிகளுக்கு அவற்றை அளிக்க வேண்டும்.
- சராசரி ஆளிடம் நான் இதை விளக்க முடிந்தால்,நான் நோபல் பரிசு பெற்றிருக்க மாட்டேன்.
- நான் ஒன்றை உருவாக்கவில்லை எனில், நான் அதை புரிந்து கொள்ள முடியாது.
- நீங்கள் ஒரு விஷயத்தில் திடமாக இல்லை என்றால், வேறு வழியில் பயணிக்க வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
- பாயும் அலைகள் ...
அணுத்திரலின் மலைகள் ,
தன வேலையை மட்டுமே மூடத்தனமாய் நினைக்கும் ஒவ்வொன்றும்...
இலட்ச கோடிகள் அப்பால்
... இருந்தும் இசைவாக உருவாகும் வெள்ளை நுரை.காலம் காலமாக..
எந்தொரு கண்ணும் காணும் முன்பாகவே...
வருடம் பின் வருடமாக..
கரையை இடிப்போன்ற முழக்கத்துடன் தாக்கிகொண்டிருக்கிறது.
யாருக்காக,எதற்காக? ..
ஓர் இறந்த கோளில்..
உயிரினமே இலாத உலகில்.ஓய்வே இல்லாமல்..
சக்தியால் கொடுமைபடுத்தப்பட்டு ..
சூரியனால் வீணடிக்கப்பட்டு..
அந்தரத்தில் ஊற்றப்பட்டு.
ஓர் சிற்றுண்ணி கடலை உறும செய்கிறது..கடலின் ஆழத்தில்...
எல்லா அனுத்திரள்களும் இன்னொன்றின்
அமைப்பை திரும்ப செய்கின்றன
புதிய சிக்கலான ஒன்று உருவாகும் வரை.
தங்களை போன்றே உரு செய்கின்றன..
இதன்பின் ஓர் புதிய ஆட்டம் ஆரம்பிக்கிறது.உருவத்திலும் சிக்கலிலும் வளரும்..
உயிரினங்கள்,அணுக்களின் தொகுதிகள்,
ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் , புரதம்...
இன்னும் கடுன்சிக்கலான வடிவத்தில் ஆடுகின்றன.தொட்டிலிலிருந்து வெளியேறி வறண்ட நிலத்தில்..
இங்கே அது நிற்கிறது..
சுய உணர்வுள்ள அணுக்கள்...
ஆர்வமுள்ள பொருள் .கடலில் நின்றுக்கொண்டு ,
தன் யோசனையில் வியக்கிறது..
நான் அணுக்களின் அண்டம்..
இந்த அண்டத்தில் ஓர் அணு.- தேசிய அறிவியல் சங்கத்தில் உரையாற்றிய அறிவியலின் மதிப்பு (இலையுதிர்காலம் 1955)
- நான் இருமுறை இறப்பதை வெறுக்கிறேன். அது மிகவும் சலிப்பானது.
- ஜேம்ஸ் க்ளயீக் இயற்றிய மேதை:ரிச்சர்ட் பிய்ந்மனின் வாழ்கை மற்றும் அறிவியல் (1992) எனும் நூலில் அவர் சொன்ன இறுதி வார்த்தைகள்.
வெளி இணைப்புக்கள்
தொகு
- The Feynman Lectures Website
- Feynman Online!
- Feynman Books, Audio, Video and More on The Tuva Trader.
- Unique freeview videos of Feynman's lectures on QED courtesy of The Vega Science Trust and The University of Auckland
- Los Alamos National Laboratory Richard Feynman page
- The Nobel Prize Winners in Physics 1965
- About Richard Feynman
- Feynman's classic 1959 talk:There's Plenty of Room at the Bottom
- Richard Feynman and The Connection Machine
- Infinity quotes at the Internet Movie Database
- PhysicsWeb review of the play QED
- BBC Horizon: The Pleasure of Finding Things Out
- Richard Feynman, Winner of the 1965 Nobel Prize in Physics
- Feynman's Scientific Publications
- The Letters of Richard P. Feynman Online
- A Biography of R. P. Feynman as a mathematician